Advertisment

NEET Results; நீட் தேர்வு முடிவுகள்; கட் ஆஃப், சாதி மற்றும் பாலினம் வாரியான விவரங்கள்

NEET results explained: Cut off marks, gender and caste-wise break up: நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு; கட் ஆஃப் மதிப்பெண்கள், சாதி மற்றும் பாலினம் வாரியான விவரங்கள் இதோ…

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET Results; நீட் தேர்வு முடிவுகள்; கட் ஆஃப், சாதி மற்றும் பாலினம் வாரியான விவரங்கள்

இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளில் இளங்கலை மருத்துவ இடங்களின் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் (NEET) முடிவுகள், தேசிய தேர்வு முகமையால் (NTA) நேற்று திங்கள்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது.

Advertisment

மறுதேர்வு நடத்த இரண்டு மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் முடிவுகள் தாமதமானது. எவ்வாறாயினும், செப்டம்பர் 12 ஆம் தேதி தேர்வெழுதிய 16 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, அக்டோபர் 28 அன்று உச்சநீதிமன்றம் தடையை நீக்கியது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், இளங்கலை ஆயுர்வேதம், இளங்கலை சித்த மருத்துவம், இளங்கலை யுனானி மருத்துவம், இளங்கலை ஹோமியோபதி மருத்துவம், மற்றும் பிஎஸ்சி (செவிலியர்) போன்ற படிப்புகளில் சேர்க்கைக்கான தகுதித் தேர்வு தான் இந்த நீட் தேர்வு.

நாட்டின் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனமான AIIMS (All India Institute of Medical Sciences) மூலம் தனித்தனியாக நடத்தப்படும் தகுதித் தேர்வு உட்பட, மத்திய மற்றும் மாநில அளவில் முன்பு நடத்தப்பட்ட அகில இந்திய மருத்துவ முன் தேர்வு (AIPMT) மற்றும் பிற நுழைவுத் தேர்வுகளுக்குப் பதிலாக NEET தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு எத்தனை விண்ணப்பதாரர்கள் NEET-UG தகுதி பெற்றுள்ளனர்?

மொத்தம் 8,70,074 விண்ணப்பதாரர்கள் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர், 16,14,777 பேர் தேர்வுக்கு பதிவு செய்த நிலையில், 15,44,275 பேர் தேர்வெழுதினர். 2020 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, ​​இந்த ஆண்டு 1.77 லட்சம் பேர் கூடுதலாக தேர்வெழுதினர். மேலும், 2019ல் 15,19,375 பேர் மற்றும் 2020ல் 15,97,435 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்ததுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அதிக விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். நியாயமற்ற வழிமுறைகளை பின்பற்றியதற்காக 15 மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாலினம் மற்றும் சாதி வாரியான விவரங்கள்

கடந்த கால போக்கை வைத்து பார்க்கும்போது, ஆண்களை விட அதிகமான பெண்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களில், பெண்கள் 56.8 சதவீதமாக உள்ளனர், இது கடந்த ஆண்டு 55.46 சதவீதமாக இருந்தது. 2019 இல் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களில் பெண்களின் பங்கு 57.11 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு தகுதி பெற்ற முதல் 20 விண்ணப்பதாரர்களில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கார்த்திகா ஜி நாயர் மற்றும் வைஷ்ணவி சர்தா ஆகிய இரு பெண்கள் உள்ளனர். தகுதிபெறும் விண்ணப்பதாரர்களின் சாதி வாரியான பிரிவுகள், கடந்த ஆண்டு 12.8 சதவீதம் எஸ்சி, 46.59 சதவீதம் ஓபிசி மற்றும் 4.38 சதவீதம் எஸ்டி என இருந்து, இந்த ஆண்டு 13.12 சதவீதம் எஸ்சி, 45.6 சதவீதம் ஓபிசி மற்றும் 4.61 சதவீதம் எஸ்டி என்று உள்ளது.

மாநில வாரியாக ஏதேனும் வேறுபாடுகள் உள்ளதா?

NTA இன்னும் விரிவான மாநில வாரியான விவரங்களை வெளியிடவில்லை. இருப்பினும், முதல் 20 விண்ணப்பதாரர்களைப் பார்த்தால், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தலா மூன்று பேர், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் டெல்லியில் இருந்து தலா இருவர், கேரளா, மேற்கு வங்காளம், பீகார், ஹரியானா, பஞ்சாப் மற்றும் குஜராத்தில் இருந்து தலா ஒருவர் வந்துள்ளனர். முதல் முறையாக வெளிநாட்டு மையங்களான குவைத் மற்றும் துபாய் உட்பட 3,858 மையங்களில் 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. கடந்த ஆண்டு 878 மற்றும் 2019 இல் 687 பேர் பெற்றிருந்த நிலையில், இந்த 883 வெளிநாட்டு விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

தகுதி கட் ஆஃப்கள்

மிருணாள் குட்டேரி (தெலுங்கானா), தன்மய் குப்தா (டெல்லி) மற்றும் கார்த்திகா ஜி நாயர் (மகாராஷ்டிரா) ஆகிய மூன்று பேர் முதல் தரவரிசையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர் - தலா 720 மதிப்பெண்கள் பெற்றனர். இருப்பினும், ஒட்டுமொத்த தகுதி மதிப்பெண்கள், 2020 உடன் ஒப்பிடும்போது, ​​இந்த ஆண்டு சரிவைக் காட்டியுள்ளன. பொதுப் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் இந்த ஆண்டு 138 ஆகவும், 2020 இல் 147 ஆகவும் இருந்தது. எஸ்டி, எஸ்சி மற்றும் ஓபிசி பிரிவுகளில், இந்த ஆண்டு கட்-ஆஃப் 108, ஆனால் கடந்த ஆண்டு 113 ஆக இருந்தது. பொது/EWS PwDக்கான கட் ஆஃப்கள் 2020ல் 129 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு, 122 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்து என்ன?

கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தேர்வு முகமை, அதன் வரம்புகள் தேர்வு நடத்துவதற்கும் முடிவுகளை அறிவிப்பதற்கும் மட்டுமே என்று தெளிவுபடுத்தியுள்ளது. சுகாதார சேவைகள் இயக்குநரகம் இப்போது அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத கவுன்சிலிங்கை நடத்தும்.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் என்பது, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், மற்றும் BHU மற்றும் AMU போன்றவற்றில் உள்ள மருத்துவ இடங்கள். கவுன்சிலிங்கின் விவரங்கள் மற்றும் அட்டவணைகள் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் மாநிலங்களின் மருத்துவக் கல்வி இயக்குனரகங்களின் இணையதளங்களில் கிடைக்கும்.

மாநில ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் மாநிலங்களின் வரம்பின் கீழ் வரும் பிற இடங்களின் விஷயத்தில், விண்ணப்பதாரர்கள் மாநில விதிகளின்படி தங்கள் இருப்பிடம் மற்றும் தகுதிப் பட்டியலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் சம்பந்தப்பட்ட மாநில கவுன்சிலிங் அமைப்பால் நடத்தப்படும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Neet Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment