நீட் தேர்வு : ஆங்கில வழி, நகர்ப்புற, சிபிஎஸ்இ மாணவர்களுக்கே சாதகமாக முடிவுகள்

NEET skewed results in favour of english medium cbse students Tamilnadu Tamil News நம் மாநிலத்தில் நீட் தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பாலோர் பயிற்சிக்காக லட்சங்களை செலவிட்டுள்ளனர்.

NEET skewed results in favour of english medium cbse students Tamilnadu Tamil News
NEET skewed results in favour of english medium cbse students Tamilnadu Tamil News

NEET skewed results in favour of english medium cbse students Tamilnadu Tamil News : 2017-18 ஆம் ஆண்டில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில், கிராமப்புறங்கள், பொருளாதார ரீதியாகப் பலவீனமான பின்னணிகள், தமிழ் நடுத்தரப் பள்ளிகள் மற்றும் மாநில வாரிய இணைப்புப் பள்ளிகளின் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவால் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் கண்டுபிடிப்புகள்தான், மாநிலத்தில் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கைக்கான நீட் தேர்வை ரத்து செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையின் அடிப்படையை உருவாக்கியது.

மருத்துவ சேர்க்கையில் நீட் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட குழு, கிராமப்புற மாணவர்களின் விகிதம் சராசரியாக நீட் தேர்வுக்கு முந்தைய 61.45%-லிருந்து 50.81% ஆகக் குறைந்துள்ளது என்கின்றனர்.

நீட் அறிமுகத்திற்கு முன்பே குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற அரசுப் பள்ளிகளின் வேட்பாளர்கள் மேலும் பின்தங்கினர். சராசரியாக, அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழ்நாட்டில் முதலாம் ஆண்டு மருத்துவ வகுப்பில், 1.12% தேர்ச்சி பெற்றனர். இந்த எண்ணிக்கை நீட்-க்குப் பிறகு 0.16% ஆகக் குறைந்தது. இது இட ஒதுக்கப்படாதவர்களின் எண்ணிக்கைதான். கடந்த ஆண்டு, மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% கிடைமட்ட இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது.

குழுவின் அறிக்கையின்படி நீட் தேர்வில், மருத்துவக் கல்லூரிகளில் ஆங்கில வழிக்கல்வி மாணவர்களின் பங்கு 85.12% லிருந்து 98.01% ஆக அதிகரித்துள்ளது. மறுபுறம், தமிழ் வழி பள்ளி மாணவர்கள் இப்போது வெறும் 1.99% ஆக உள்ளனர். இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 14.88% ஆக இருந்தது.

2.5 லட்சத்திற்கும் குறைவான குடும்ப ஆண்டு வருமானம் கொண்ட மாணவர்களின் விகிதம் 2016-17-ம் ஆண்டில் 47.42%-லிருந்து 2020-21-ல் 41.05% ஆகக் குறைந்தது. மறுபுறம், குடும்ப வருடாந்திர வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் 52.11%-லிருந்து 58.95%-ஆக அதிகரித்துள்ளனர்.

சிபிஎஸ்இ-யுடன் இணைந்த பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மாநில வாரிய பள்ளி மாணவர்களை விட அதிகமாகப் பயனடைந்தனர் என்று குழு தெரிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு முன், 98.23% மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் மாநில வாரிய பள்ளிகளிலிருந்தும், 1%-க்கும் குறைவானவர்கள் CBSE இணைந்த பள்ளிகளிலிருந்தும் இருந்தனர். இப்போது, ​​சிபிஎஸ்இ மாணவர்கள் 38.84%, மாநில போர்டு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 59.41% உள்ளனர். நீட் முக்கியமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று குழு குறிப்பிடுகிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள எந்த மருத்துவப் பள்ளியிலும் நுழைவதற்கான ஒரே ஒரு தேர்வு, நீட் மட்டுமே. இது 2017-18 கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.

நீட் தேர்வுக்கு முன்பு, தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு, முக்கியமாகப் பொதுத்தேர்வு மதிப்பெண்களே அடிப்படையாக இருந்தன. 2017 முதல், அரசாணை, வழக்கு மற்றும் போராட்டங்கள் மூலம் அரசு தன்னைத் தேர்வில் இருந்து விலக்கிக்கொள்ள முயற்சி செய்து வருகிறது. கடந்த வாரத்தில் தமிழ்நாட்டில், நுழைவுத் தேர்வு தொடர்பான இரண்டு தற்கொலைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த திங்களன்று, முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டசபையில் மத்திய அரசின் மருத்துவ நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு கோரும் மசோதாவைத் தாக்கல் செய்தார். மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இப்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு செயல்படுத்தப்பட வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்வது திமுகவின் வாக்குறுதிகளில் ஒன்று. “கடந்த சில ஆண்டுகளில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களைப் பாதித்ததா என்பதை ஆய்வு செய்ய” ஒன்பது பேர் கொண்ட குழுவை இந்த ஆண்டு ஜூன் மாதம் தி.மு.க அரசு அமைத்தது. முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, ஒரு மாதத்திற்குப் பிறகுத் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறப் பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல செலவு செய்ய முடியாததால், கிராமப்புற மாணவர்கள் இப்போது குறிப்பாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ஜவஹர் நேசன் குறிப்பிட்டார்.

“2020-21-ல், தமிழ்நாட்டில் மருத்துவ சீட் பெற்ற 99% விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பயிற்சியைப் பெற்றிருக்கின்றனர். இவற்றில், பாதிக்கும் அதிகமானோர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். அதாவது, நம் மாநிலத்தில் நீட் தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பாலோர் பயிற்சிக்காக லட்சங்களை செலவிட்டுள்ளனர். இந்நிலையில், கிராமங்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அவர்களுடன் போட்டியிடுவது எந்த விதத்தில் சரி?” என்று அவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

மேலும், “நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் மருத்துவ திட்டத்தில் மாணவர்களின் செயல்திறனை நாங்கள் பகுப்பாய்வு செய்துள்ளோம். நீட் மூலம் வந்தவர்களை விட அவர்களின் போர்டு மதிப்பெண்களின் அடிப்படையில் வந்தவர்கள் ஓரளவு சிறப்பாக செயல்படுகிறார்கள். வகுப்பறை செயல்திறனில் எந்த வித்தியாசமும் இல்லாதபோது, ​​நீட்-க்கு ஆதரவாகத் தரமான வாதம் இருக்காது” என்று நீட் தரம் வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்கிறது என்ற வாதத்தை மறுத்து அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Neet skewed results in favour of english medium cbse students tamilnadu tamil news

Next Story
அண்ணா பல்கலைக்கழக வேலை வாய்ப்பு; 8th முதல் பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com