Advertisment

NEET UG Results 2022: நீட் தேர்வு முடிவு வெளியீடு: ராஜஸ்தான் மாணவி முதலிடம்

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு முடிவுகள் வெளியானது. ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா, நாட்டிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். 'டாப் 50' மாணவர்களில் 2 பேர் தமிழகத்திலிருந்து இடம் பிடித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET UG Results 2022: நீட் தேர்வு முடிவு வெளியீடு: ராஜஸ்தான் மாணவி முதலிடம்

NEET UG result 2022 | NEET result update | NEET 2022 result time | NEET 2022 முடிவு |   NEET தேதி மற்றும் நேரம்-

Advertisment

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு முடிவுகள் வெளியானது. ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா, நாட்டிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். 'டாப் 50' மாணவர்களில் 2 பேர் தமிழகத்திலிருந்து இடம் பிடித்துள்ளனர்.

டெல்லி மாணவர் ஆஷிஷ் பத்ரா வத்ஷா என்ற மாணவர் இரண்டாம் இடமும், கர்நாடகாவை சேர்ந்த ஹிரிஷிகேஷ் என்ற மாணவர் 3வது இடமும் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் 99.99 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதே மதிப்பெண் எடுத்த கர்நாடகாவை சேர்ந்த ருச்சா பவாஷி என்ற மாணவிக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத்  தேர்வு முடிவுகள், இன்று (செப்.7) வெளியாகும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. 497 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.

தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூா் ஆகிய 18 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் நீட் தோ்வு நடந்தது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது உள்ளிட்ட மொழிகளில் தோ்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 17.78 லட்சம் மாணவா்கள் இந்த தோ்வை எழுதினா்.

தமிழகத்தில் மட்டும் இந்த ஆண்டு 1.42 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். தொடர்ந்து ஆன்சர் கீ, , தோ்வா்களின் ஓஎம்ஆா் விடைத்தாள் நகல்கள் ஆக. 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன. https://neet.nta.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக மாணவா்கள் மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி, எம்சிசி நீட் யுஜி கவுன்சிலிங் அட்டவணையை வெளியிடுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:41 (IST) 07 Sep 2022
    நீட் யூஜி 2022 தேர்வு முடிவுகள் நள்ளிரவில் அறிவிக்கப்படும் என தகவல்

    நீட் யூஜி 2022 முடிவை நள்ளிரவில் அறிவிக்க வாய்ப்புள்ளது என்று என்.டி.ஏ (NTA) அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். ஜூலை 17ம் தேதி 13 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.



  • 21:51 (IST) 07 Sep 2022
    நீட் பிஜி 2022 கவுன்சிலிங்: 2-வது சுற்றுக்கான தற்காலிக கவுன்சிலிங் பதிவு அக்டோபர் 10 அன்று தொடங்குகிறது

    நீட் பிஜி கவுன்சிங்கிற்கான இரண்டாவது சுற்றுக்கு, பதிவு செயல்முறை அக்டோபர் 10 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 14 ஆம் தேதி முடிவடையும். விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 11 முதல் செப்டம்பர் 14 வரை ஸ்பெஷலைசேஷன் பகுதியைத் தேர்வு செய்யலாம்.

    பல்கலைக்கழகங்கள் அல்லது நிறுவனங்களால் உள் விண்ணப்பதாரர்களின் சரிபார்ப்பு அக்டோபர் 14 முதல் 16 வரை செய்யப்படும்.. இட ஒதுக்கீடு செயல்முறை அக்டோபர் 17 முதல் 18 வரை நடைபெறும். முடிவுகள் அக்டோபர் 19 அன்று அறிவிக்கப்படும் மற்றும் சேரும் தேதி அக்டோபர் 20 முதல் 26 வரை இருக்கும். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 21:51 (IST) 07 Sep 2022
    நீட் பிஜி 2022 கவுன்சிலிங்: 2-வது சுற்றுக்கான தற்காலிக கவுன்சிலிங் பதிவு அக்டோபர் 10 அன்று தொடங்குகிறது

    நீட் பிஜி கவுன்சிங்கிற்கான இரண்டாவது சுற்றுக்கு, பதிவு செயல்முறை அக்டோபர் 10 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 14 ஆம் தேதி முடிவடையும். விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 11 முதல் செப்டம்பர் 14 வரை ஸ்பெஷலைசேஷன் பகுதியைத் தேர்வு செய்யலாம்.

    பல்கலைக்கழகங்கள் அல்லது நிறுவனங்களால் உள் விண்ணப்பதாரர்களின் சரிபார்ப்பு அக்டோபர் 14 முதல் 16 வரை செய்யப்படும்.. இட ஒதுக்கீடு செயல்முறை அக்டோபர் 17 முதல் 18 வரை நடைபெறும். முடிவுகள் அக்டோபர் 19 அன்று அறிவிக்கப்படும் மற்றும் சேரும் தேதி அக்டோபர் 20 முதல் 26 வரை இருக்கும். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 21:48 (IST) 07 Sep 2022
    நீட் தேர்வு 2022 முடிவுகள்: மதிப்பெண் மெமோவை சரிபார்த்து பதிவிறக்கம் செய்வது எப்படி

    நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in. என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம். தேர்வர் இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ரிசல்ட் என்பதை கிளிக் செய்து நீட் யூஜி (NEET (UG)) 2022" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். அதில் நுழைவுத் தேர்வுக்கான அவர்களின் சான்றுகளை உள்ளிட்டு உள்நுழையவும். நீட் யூஜி (NEET UG 2022) முடிவுகள் காட்டப்படும். மேலும், அதைப் பதிவிறக்கிய பிறகு குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.



  • 21:48 (IST) 07 Sep 2022
    நீட் தேர்வு 2022 முடிவுகள்: மதிப்பெண் மெமோவை சரிபார்த்து பதிவிறக்கம் செய்வது எப்படி

    நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in. என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம். தேர்வர் இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ரிசல்ட் என்பதை கிளிக் செய்து நீட் யூஜி (NEET (UG)) 2022" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். அதில் நுழைவுத் தேர்வுக்கான அவர்களின் சான்றுகளை உள்ளிட்டு உள்நுழையவும். நீட் யூஜி (NEET UG 2022) முடிவுகள் காட்டப்படும். மேலும், அதைப் பதிவிறக்கிய பிறகு குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.



  • 21:38 (IST) 07 Sep 2022
    நீட் முதுகலை கவுன்சிலிங் செப்டம்பர் 19 முதல் நடைபெறும் என தகவல்

    நீட் முதுகலை கவுன்சிலிங் செப்டம்பர் 19 முதல் நடைபெறும் என்று மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திங்கள்கிழமை நடந்த குடியுரிமை மருத்துவர்களுக்கு கூட்டத்தில் தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கவுன்சிலிங் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் ஒத்திவைக்கப்பட்டது.



  • 18:57 (IST) 07 Sep 2022
    நீட் தேர்வுக்கான விடை குறிப்புகள் விரைவில் வெளியாகும் என தகவல்

    நீட் தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்காலிக விடைக்குறிப்புக்கு எதிரான ஆட்சேபனைகளின் அடிப்படையில் இறுதி விடைக்குறிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும், இறுதி விடை குறிப்புகளில் கொடுக்கப்பட்ட விடைகளின் அடிப்படையில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் neet.nta.nic.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.



  • 18:55 (IST) 07 Sep 2022
    நீட் தேர்வுக்கான விடை குறிப்புகள் விரைவில் வெளியாகும் என தகவல்

    நீட் தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்காலிக விடைக்குறிப்புக்கு எதிரான ஆட்சேபனைகளின் அடிப்படையில் இறுதி விடைக்குறிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும், இறுதி விடை குறிப்புகளில் கொடுக்கப்பட்ட விடைகளின் அடிப்படையில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் neet.nta.nic.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.



  • 16:06 (IST) 07 Sep 2022
    நீட் கவுன்சிலிங்

    NEET 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கவுன்சிலிங்கை mcc.nic.in இல் மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) நடத்துகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் NEET 2022 AIQ கவுன்சிலிங் 2022 இல் பங்கேற்க தகுதி பெற மாட்டார்கள். அத்தகைய விண்ணப்பதாரர்கள் NEET 2022 மாநில ஒதுக்கீட்டு கவுன்சிலிங் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.



  • 15:37 (IST) 07 Sep 2022
    உக்ரைன் மாணவர்கள் மற்ற வெளிநாட்டு கல்லூரிகளில் தங்கள் கல்வியைத் தொடரலாம்

    தேசிய மருத்துவ ஆணையம், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் தனது மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு வழங்கும் கல்வி இயக்கம் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது, இது உலகளவில் மற்ற நாடுகளில் தங்கள் கல்வியை முடிக்க அனுமதிக்கிறது.



  • 15:35 (IST) 07 Sep 2022
    நிபுணர்களால் எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப்

    நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த ஆண்டுக்கான கட்-ஆஃப் 720 இல் 138 முதல் 145 வரை இருக்கும். மேலும் OBC/SC/ST பிரிவினருக்கு 720ல் 108-137 வரை இருக்கும்.



  • 15:06 (IST) 07 Sep 2022
    புரிந்துணர்வு ஒப்பந்தம்

    இயற்கை மருத்துவ சிகிச்சையின் அறிவை மேம்படுத்துவதற்கும், பரப்புவதற்கும் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் (NIN) டிஃபென்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு டெக்னாலஜியுடன் (DIAT) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.



  • 14:07 (IST) 07 Sep 2022
    முதல் முறையாக வெளிநாட்டில் 14 நகரங்களில் தேர்வு

    இந்த ஆண்டு, இந்தியாவில் 497 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் 3,570 மையங்களில் நீட் யுஜி நடத்தப்பட்டது. அபுதாபி, பாங்காக், கொழும்பு, தோஹா, காத்மாண்டு, கோலாலம்பூர், லாகோஸ், மனாமா, மஸ்கட், ரியாத், ஷார்ஜா, சிங்கப்பூர் மற்றும் துபாய் மற்றும் குவைத் சிட்டி ஆகிய நகரங்களிலும் முதல் முறையாக தேர்வு நடத்தப்பட்டது.



  • 13:58 (IST) 07 Sep 2022
    டிஜிலாக்கர் மூலம் NEET-UG முடிவை 2021 சரிபார்ப்பது எப்படி?

    நீட் தேர்வு முடிவுகள், ஆவணங்களைச் சேமிப்பதற்கும் சரிபார்ப்பதற்கும் அரசாங்கத்தின் டிஜிட்டல் தளமான டிஜிலாக்கரிலும் கிடைக்கிறது. டிஜிலாக்கரில் தங்கள் விவரங்களை பதிவு செய்து, NEET UG முடிவு 2022 மற்றும் NEET மதிப்பெண் அட்டை 2022 ஆகியவற்றை அணுகலாம்.



  • 13:56 (IST) 07 Sep 2022
    கடந்த 5 வருட தகுதி கட்-ஆஃப்



  • 13:44 (IST) 07 Sep 2022
    BDS படிப்பு காலம் 5.5 ஆண்டுகளாக அதிகரிக்கலாம்

    இளங்கலை பல்மருத்துவக் கல்வியானது MBBS போன்ற ஒரு வருட கட்டாயப் பயிற்சி மற்றும் ஒரு செமஸ்டர் முறையுடன் ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்படும். வரைவு படிப்பு விதிமுறைகளின்படி, ஒரு வருட இன்டர்ன்ஷிப் உடன், BDS படிப்பு முடிக்க ஐந்தரை ஆண்டுகள் ஆகும். தற்போது, ​​கட்டாய இன்டர்ன்ஷிப் BDS இன் பகுதியாக இல்லை.



  • 13:24 (IST) 07 Sep 2022
    NEET UG 2022 முடிவைச் சரிபார்க்க இணையதளங்கள்

    தங்கள் மதிப்பெண்களை பார்க்கக் காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள், பின்வரும் இணையதளங்களில் முடிவுகளை பார்க்கலாம்

    - neet.nta.nic.in

    -neetresults.nic.in

    - nta.ac.in



  • 13:21 (IST) 07 Sep 2022
    டிஜிலாக்கர் மூலம் NEET-UG முடிவை 2021 சரிபார்ப்பது எப்படி?

    நீட் தேர்வு முடிவுகள், ஆவணங்களைச் சேமிப்பதற்கும் சரிபார்ப்பதற்கும் அரசாங்கத்தின் டிஜிட்டல் தளமான டிஜிலாக்கரிலும் கிடைக்கிறது. டிஜிலாக்கரில் தங்கள் விவரங்களை பதிவு செய்து, NEET UG முடிவு 2022 மற்றும் NEET மதிப்பெண் அட்டை 2022 ஆகியவற்றை அணுகலாம்.



  • 12:59 (IST) 07 Sep 2022
    மாநில அளவிலான மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கை செயல்முறை

    நீட் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு அந்தந்த மாநில அதிகாரிகள் 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு கவுன்சிலிங்கிற்கான தகுதிப் பட்டியலை வெளியிடுவார்கள்.

    விண்ணப்பதாரர்கள் முதலில் அந்தந்த மாநில இணையதளங்களில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    - பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள்’ படிப்பு மற்றும் கல்லூரிகளின் தேர்வுகளை நிரப்ப வேண்டும் மற்றும் தேவையான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

    - நீட் தரவரிசை, பூர்த்தி செய்யப்பட்ட விருப்பத்தேர்வுகள், இடங்களின் எண்ணிக்கை மற்றும் இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில், இட ஒதுக்கீடு செய்யப்படும்.

    - இடத்தை பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒதுக்கப்பட்ட கல்வி நிறுவனத்தை தெரிவிக்க வேண்டும்



  • 12:27 (IST) 07 Sep 2022
    பெற்றோர் மாணவர்களை திட்டுவதை தவிர்க்க வேண்டும்

    நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு தொடர்ந்து போராடி வருகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மன நெருக்கடி இருந்தால் மனநல ஆலோசனை குழுக்களை அணுகி ஆறுதல் வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியானதும் பெற்றோர் மாணவர்களை கடுமையாக திட்டுவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.



  • 12:03 (IST) 07 Sep 2022
    மதிப்பெண் அட்டையை சரிபார்ப்பதற்கான படிகள்

    படி 1: neet.nta.nic.in- அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்

    படி 2: " Result – NEET (UG) 2022" இணைப்பைக் கிளிக் செய்யவும்

    படி 3: NEET 2021 நுழைவுத் தேர்வுக்கான உங்கள் தனி விவரங்களை எண்டர் செய்து லாக் இன் செய்யவும்.

    படி 4: NEET 2022 முடிவுகள் காட்டப்படும்

    படி 5: பதிவிறக்கம் செய்த பிறகு எதிர்கால தேவைக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.



  • 11:49 (IST) 07 Sep 2022
    NEET மதிப்பெண் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின் பட்டியல்

    NEET 2022 மதிப்பெண் அட்டையில் தனிப்பட்ட விவரங்கள், ஒட்டுமொத்த மற்றும் பாட வாரியான மதிப்பெண்கள், சதவீத மதிப்பெண்கள், அகில இந்திய ரேங்க் (AIR), தகுதி நிலை ஆகியவை குறிப்பிடப்படும். அதனுடன், நீட் 2021 கட்-ஆஃப் மதிப்பெண்களும் அறிவிக்கப்படும்.



  • 11:24 (IST) 07 Sep 2022
    CUET உடன் NEET, JEE ஐ இணைக்கும் திட்டம் இல்லை

    மத்திய கல்வி அமைச்சர் கோட்டாவில் பயிற்சி மாணவர்களுடன் உரையாடியபோது, ​​CUET உடன் JEE மற்றும் NEET ஐ இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார்.



  • 11:17 (IST) 07 Sep 2022
    NIRF தரவரிசையின்படி சிறந்த மருத்துவக் கல்லூரிகள்

    தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் (NIRF 2022) மருத்துவப் பிரிவில் டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.

    ரேங்க் 1: டெல்லி எய்ம்ஸ்

    ரேங்க் 2: PGIMER

    ரேங்க் 3: CMC. வேலூர்

    ரேங்க் 4: நிம்ஹான்ஸ், பெங்களூர்

    ரேங்க் 5: பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

    ரேங்க் 6: ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

    ரேங்க் 7: சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம்

    ரேங்க் 8: அமிர்தா விஸ்வ வித்யாபீடம்

    ரேங்க் 9: ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம்

    ரேங்க் 10: கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி, மணிப்பால்



  • 11:08 (IST) 07 Sep 2022
    NEET UG தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு என்ன செய்வது?

    NEET UG முடிவுகளுக்குப் பிறகு, விரும்பிய மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான அடுத்த முக்கியமான படி கவுன்சிலிங் ஆகும். 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் 85 சதவீதம் மாநில ஒதுக்கீடு என இது இரண்டு ஒதுக்கீட்டுக்கு நடத்தப்படுகிறது.

    NEET 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கவுன்சிலிங்கை மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) mcc.nic.in இல் அனைத்து அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு நடத்துகிறது. நீட் 2022 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் அந்தந்த மாநில அதிகாரிகளால் அவர்களின் இணையதளங்களில் நடத்தப்படும்.



  • 11:05 (IST) 07 Sep 2022
    NEET கவுன்சிலிங் செயல்முறை

    நீட் முடிவு அறிவிக்கப்பட்டவுடன், தகுதியான விண்ணப்பதாரர்கள் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கும் அந்தந்த மாநில அதிகாரிகளால் மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி (எம்சிசி) நடத்தும் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்.



  • 11:05 (IST) 07 Sep 2022
    இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள்

    MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் வந்தன மொத்தம் 18.72 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு பதிவு செய்தனர். இது 95 சதவீத வருகையைப் பதிவு செய்தது.



  • 10:34 (IST) 07 Sep 2022
    நீட் கட்-ஆஃப் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

    நீட் 2022 வினாத்தாளின் கடின நிலை, கிடைக்கக்கூடிய மொத்த இடங்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வில் பங்கேற்கும் மொத்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் கட்-ஆஃப் கணக்கிடப்படுகிறது.



  • 10:29 (IST) 07 Sep 2022
    CUET UG 2022 ஆன்சர் கீ இன்று வெளியாகிறது

    நீட் முடிவுடன், CUET UG விடைக்குறிப்பையும் இன்று வெளியிட NTA திட்டமிட்டுள்ளது. தற்காலிக விடைக்குறிப்பை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான-cuet.samarth.ac.in-ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைக்குறிப்புக்கு எதிரான ஆட்சேபனைகளைத் தெரிவிக்க விண்ணப்பதாரர்களுக்கு அவகாசம் வழங்கப்படும். மேலும் படிக்கவும்



  • 10:27 (IST) 07 Sep 2022
    புதிய டை-பிரேக்கர் ஃபார்முலா என்ன?

    இந்த ஆண்டு முதல், டை-பிரேக்கிங் அளவுகோலாக, தேசிய தேர்வு முகமை, வயதை நீக்கியுள்ளது. எனவே, இரண்டு மாணவர்களிடையே டை ஏற்பட்டால், உயிரியலில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் என்டிஏ அதைத் தீர்க்கும். அதிலும் ஒரே மதிப்பெண்கள் தொடர்ந்தால், வேதியியலில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர் முன்னுரிமை பெறுவார்.

    அதைத் தொடர்ந்து குறைந்த தவறான பதில்களைக் கொண்ட மாணவர் முன்னுரிமை பெறுவார்.



  • 10:26 (IST) 07 Sep 2022
    நீட் தேர்வு முடிவு நேரம்

    NEET UG 2022 தேர்வுக்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிடுகிறது. இருப்பினும், முடிவு நேரம் குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. NTA வட்டாரங்களின்படி, முடிவுகள் மாலையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிக்கப்பட்டதும், மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in இல் சரிபார்க்கலாம்.



Neet Mbbs Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment