scorecardresearch

‘3டி அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையில் வெற்றியாளராக மாறலாம்’: ‘நீயா நானா’ கோபிநாத்

“இளம் தலைமுறை மாணவ மாணவிகள் 3டி அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் வெற்றியாளராக மாறலாம் என்று ‘நீயா நானா’ கோபிநாத் கூறியுள்ளார்.

Neeya Naana Gopinath on jobs in 3D and VFX Tamil News
‘Neeya Naana’ Gopinath MAAC Coimbatore

பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.

கோவை மாயா அகாடமி சார்பாக நடைபெற்ற நவீன தொழில் நுட்பம் சார்ந்த குறும்படம் இயக்கம் – டிஜிட்டல் ஓவியம்,ஃபோட்டோ கிராபி,ரீல்ஸ் மேக்கிங்,உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சிறந்த படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக் (MAAC) கோவையில் நவீன 3டி (3D) அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ – மாணவிகளுக்குபயிற்சி அளித்து வருகிறது. கோவை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் கிளை மையங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாக் டிஜிட்டல் துறையில் சாதித்த,சாதிக்க விரும்பும் இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாக நவீன தொழில் நுட்பம் சார்ந்த குறும்படம் இயக்கம்,டிஜிட்டல் ஓவியம்,ஃபோட்டோ கிராபி,ரீல்ஸ் மேக்கிங்,குழு மற்றும் தனி நடனம்,மேக்கப் கலை என பல்வேறு போட்டிகளை நடத்தியது.

இதில். மாக் மையத்தில் பயின்று வரும் மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்ட நிலையில்,சிறந்த படைப்புகளுக்கான விருது வழங்கும் விழா கோவை இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாக் பயிற்சி மையத்தின் தலைமை செயல் அதிகாரி சம்ஜித் தனராஜ் தலைமை வகித்தார். இதில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, ,கல்லூரி முதல்வர் பொன்னுசாமி ,எஸ்.என்.ஆர்.கல்லூரி முதல்வர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக தன்னம்பிக்கை பேச்சாளரும், எழுத்தாளருமான விஜய் டி.வி ‘நீயா நானா’ புகழ் கோபிநாத் கலந்து கொண்டு சிறந்த படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். மாணவர்கள் மத்தியில் அவர் பேசுகையில், 3டிஅனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள் இருப்பதாகவும், இளம் தலைமுறை மாணவ – மாணவிகள் தங்களது வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால், இதில் வெற்றியாளராக மாறலாம் என்றார். இந்த நிகழ்ச்சியில், மாயா அகாடமி விற்பனை, மண்டல மேலாளர் பிரேம் ராஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Neeya naana gopinath on jobs in 3d and vfx tamil news