Advertisment

சென்னை மத்திய அரசு நிறுவனத்தில் வேலை; ஐடிஐ, டிகிரி, பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

NIOT recruitment 237 vacancies ITI degree Engg holders apply soon: தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு; 237 காலியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
சென்னை மத்திய அரசு நிறுவனத்தில் வேலை; ஐடிஐ, டிகிரி, பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னையில் செயல்பட்டு வரும், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் 237 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் 9 வகையான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 237 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியம். விண்ணப்பிக்க கடைசி தேதி 13.09.2021.

Project Scientist – I

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 73

வயது தகுதி: 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:  Mechanical / Thermal / Civil / Naval Architect / Ocean Engineering/ ECE / Electrical/  E&I / Computer Science  போன்ற பிரிவுகளில் B.E. / B.Tech அல்லது முதுகலை படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 56,000 + HRA

Project Scientist – II

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 30

வயது தகுதி: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: Mechanical / Civil / Ocean Engineering/ ECE / Electrical/  E&I   போன்ற பிரிவுகளில் B.E. / B.Tech அல்லது முதுகலை படிப்பு படித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் வேண்டும்.

சம்பளம்: ரூ.67,000 + HRA

Project Scientist – III

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 04

வயது தகுதி: 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: M.Sc., in Marine Biology / Microbiology /Biochemistry Zoology aquaculture/ B.Tech. in Bio technology மற்றும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ.78,000 + HRA

Project Scientific Assistant

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 64

வயது தகுதி: 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி: Mechanical / Civil / Ocean Engineering/ ECE / Electrical/  E&I   போன்ற பிரிவுகளில் டிப்ளமோ அல்லது Life Sciences/ Chemistry ஆகிய படிப்புகளில் இளங்கலை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.20,000 + HRA

Project Technician

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 28

வயது தகுதி: 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி: Welder/ Fitter/ Air Conditioning/ Mechanical/ Civil/ Electrical/Electronic பிரிவுகளில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.17,000 + HRA

Project Junior Assistant

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 37

வயது தகுதி: 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.18,000 + HRA

Research Associate

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 03

வயது தகுதி: 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி: Oceanography / Physical/ LIFE SCIENCE ஆகிய பிரிவுகளில் முனைவர் பட்டம் அல்லது முதுகலை படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.47,000 + HRA

Senior Research Fellow

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 08

வயது தகுதி: 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி: Oceanography / LIFE SCIENCE ஆகிய பிரிவுகளில் B.E./B.Tech அல்லது முதுகலை படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.35,000 + HRA

Junior Research Fellow

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 02

வயது தகுதி: 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி: LIFE SCIENCE  பிரிவில் முதுகலை படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.31,000 + HRA

OBC /SC/ST/ PWBD பிரிவுகளுக்கு மத்திய அரசு வழிகாட்டுதல்களின்படி வயது தளர்வு உண்டு.

இந்த பணியிடங்களுக்கு தேவைகேற்ப எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.niot.res.in/niot1/recruitment.php என்ற இணையதள பக்கத்திற்கு சென்று, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 13.09.2021 ஆகும்.

மேற்கண்ட தகவல்களுக்கு https://www.niot.res.in/documents/admin_advertisement/2021_Project_Recruitment/Project_Recruitment_Advertisement_2021.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment