Advertisment

NIRF தரவரிசை; ஆதிக்கம் செலுத்தும் முதன்மை கல்வி நிறுவனங்கள்; சென்னை ஐ.ஐ.டி மீண்டும் முதலிடம்

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கான NIRF தரவரிசை வெளியீடு; ஐ.ஐ.டி.,க்கள் ஐ.ஐ.எம்.,கள் மற்றும் ஐ.ஐ.எஸ்.சி.,களின் ஆதிக்கம்; சென்னை ஐ.ஐ.டி தொடர்ந்து 4 ஆவது ஆண்டாக முதலிடம்

author-image
WebDesk
New Update
NIRF தரவரிசை; ஆதிக்கம் செலுத்தும் முதன்மை கல்வி நிறுவனங்கள்; சென்னை ஐ.ஐ.டி மீண்டும் முதலிடம்

NIRF Ranking 2022: IITs sweep rankings, IISc tops universities, Delhi colleges shine: வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2022 இன் படி, ஐ.ஐ.டி-மெட்ராஸ் தலைமை வகிக்க, இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் நாட்டின் உயர்கல்வித் துறையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன.

Advertisment

பொறியியல் கல்வி, மேலாண்மை அல்லது ஆராய்ச்சி என எந்த துறையாக இருந்தாலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதேஷ் குமார் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ தலைவர் பேராசிரியர் அனில் சஹஸ்ரபுத்தே ஆகியோர் முன்னிலையில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட தரவரிசையில் மற்ற கல்வி நிறுவனங்களை விட முதன்மையான கல்வி நிறுவனங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

இதையும் படியுங்கள்: தேசிய அளவில் ‘டாப்’ பொறியியல் கல்லூரிகள்: இடம்பெற்ற தமிழக கல்லூரிகள் எவை?

ஐ.ஐ.டி-மெட்ராஸ் ஒட்டுமொத்தப் பிரிவில் தொடர்ந்து நான்காவது ஆண்டாகவும், பொறியியல் கல்வியில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாகவும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினன்ஸ் (IoE) அந்தஸ்தைப் பெற்றது, ஐ.ஐ.டி-மெட்ராஸில் ஆராய்ச்சிப் பணிகளை மேம்படுத்தி, முதலிடத்தைத் தக்கவைக்க உதவியது என்று அதன் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

"ஆனால் நாங்கள் எங்கள் மாணவர்கள்-ஆசிரியர் விகிதத்தை மேம்படுத்த வேண்டும். நல்ல ஆசிரியர்களைப் பணியமர்த்த நாங்கள் தீவிரமாக முயற்சிக்கிறோம். இது முக்கியமானது, ஏனென்றால் அதிகமான ஆசிரியர்கள்-அதிக மாணவர்கள் என்பது, அதிக ஆராய்ச்சி, அதிக அவுட்ரீச், அதிக யோசனைகள், அதிக திட்டங்களைக் குறிக்கிறது. அதை வேகமாக செய்ய முயற்சிப்போம்,'' என்று இயக்குனர் காமகோடி கூறினார்.

"இரண்டாவது பகுதி கருத்து, இது மிகவும் அகநிலை விஷயம். மேலும் உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களைப் போன்று உலகளவில் அங்கீகாரம் பெற வேண்டும். ஒரு விதத்தில், NIRF ஆனது கருத்து காரணியை மேம்படுத்த உதவுகிறது," என்று பேராசிரியர் காமகோடி கூறினார்.

இந்திய கல்வி நிறுவனங்களில் சமீபத்திய QS தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய அறிவியல் கழகம் (IISc), கடந்த ஆண்டைப் போலவே NIRF தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. மூன்றில் இருந்து ஏழாவது இடங்களில் மீண்டும் 2021 ஆம் ஆண்டைப்போலவே, ஐ.ஐ.டி-பாம்பே, ஐ.ஐ.டி-டெல்லி, ஐ.ஐ.டி-கான்பூர், ஐ.ஐ.டி-கரக்பூர், ஐ.ஐ.டி-ரூர்க்கி மற்றும் ஐ.ஐ.டி-கவுஹாத்தி ஆகியவை உள்ளன, எய்ம்ஸ் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யு) அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

பழைய கல்வி நிறுவனங்களின் ஆதிக்கத்தைத் தவிர, ஏழாவது ஆண்டை எட்டியுள்ள சமீபத்திய தரவரிசையில் புதிய ஐ.ஐ.டி.,களின் செயல்திறன் தனித்து நிற்கிறது. ஐ.ஐ.டி-ஜோத்பூர் அதன் தரவரிசையை 43-ல் இருந்து 30-க்கு மேம்படுத்தியது, ஐ.ஐ.டி-மாண்டி 41-ல் இருந்து 20-வது இடத்திற்கு உயர்ந்தது, பாலக்காடு மற்றும் திருப்பதி வளாகங்கள் முதல் 100 பிரிவில் நுழைந்து (ஒட்டுமொத்தமாக) 68வது மற்றும் 56வது இடங்களை நிர்வகிக்கின்றன.

அமிர்தா விஸ்வ வித்யாபீடம் (16), மணிபால் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் (17), வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (18), பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி & சயின்ஸ்-பிலானி (32), கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (34), எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (36), அமிட்டி பல்கலைக்கழகம் (42) ஆகியவை தரவரிசையில் முன்னிலையில் உள்ள தனியார் நிறுவனங்கள்.

IISc, இதற்கிடையில், தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பல்கலைக்கழகங்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது மற்றும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஆராய்ச்சி நிறுவனங்களின் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. எய்ம்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மருத்துவக் கல்விப் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளன, அதே நேரத்தில் IIM-அகமதாபாத் நிர்வாகப் பிரிவில் சிறந்த நிறுவனமாகத் திகழ்கிறது.

பெங்களூருவில் உள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா யுனிவர்சிட்டி, சட்டப்படிப்பு பாடப்பிரிவில் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

கல்லூரிகளுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களில் டெல்லியைச் சேர்ந்த ஐந்து கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன: மிராண்டா ஹவுஸ் (1), இந்து கல்லூரி (2), LSR (5), ஆத்மா ராம் சனாதன் தர்மா கல்லூரி (7), கிரோரி மால் கல்லூரி (10). தமிழ்நாட்டிலிருந்து மூன்று கல்லூரிகள் - பிரசிடென்சி கல்லூரி (3), லயோலா கல்லூரி (4) மற்றும் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி (6) ஆகியவையும் முதல் 10-ல் இடம்பெற்றுள்ளன.

மற்ற இரண்டு இடங்களை பிடித்துள்ள செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி (8) மற்றும் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாமந்திரா (9) ஆகிய இரண்டும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவை.

NIRF ஐத் தரவரிசையைத் தயாரிக்கும் போது காரணிகளாகக் கருதப்படும் அளவுருக்கள் கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள் (30%), ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சி (30%), பட்டப்படிப்பு முடிவுகள் (20%), அவுட்ரீச் மற்றும் உள்ளடக்கம் (10%) மற்றும் கருத்து 10%.

முதல் 100 நிறுவனங்களில் 40 மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், 26 மாநில பல்கலைக்கழகங்கள், 24 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆறு தனியார் பல்கலைக்கழகங்கள் அடங்கும்.

“உலகளாவிய தரவரிசையைப் போலல்லாமல், கருத்து மற்றும் சர்வதேசமயமாக்கல் (சர்வதேச மாணவர்கள் மற்றும் சர்வதேச ஆசிரியர்களின் அடிப்படையில்) விகிதாச்சாரமற்ற வெயிட்டேஜ் அளிக்கும் தரவுகளை அடிப்படையாக கொண்டு NIRF தரவரிசைப்படுத்துகிறது, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, குறிப்பாக இந்தியா போன்ற பெரிய உயர்கல்வி அமைப்பில் கருத்துக்களை மட்டுமே கொண்ட தரவரிசை தவறுக்கு வழி வகுக்கலாம் மற்றும் செல்வாக்கு செலுத்தலாம்” என்று அறிக்கை கூறுகிறது.

மொத்தம் 4,786 தனிப்பட்ட நிறுவனங்கள் ஒட்டுமொத்த அல்லது பாடம் சார்ந்த வகைகளின் கீழ் தரவரிசைக்கு 7,254 விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன.

உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் மற்றும் மதிப்பீடு கட்டாயமாக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

"NAAC தரவரிசை அல்லது NIRF தரவரிசை உள்ள பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் மட்டுமே நிதி உதவி பெறுவதற்கு UGC சட்டம், 1956 பிரிவு 12 B இன் கீழ் UGC ஆல் பராமரிக்கப்படும் பட்டியலில் சேர்க்க தகுதியுடையதாக இருக்கும்." அடுத்த ஆண்டு NIRF தரவரிசை வகைகளில் "புதுமை மற்றும் தொழில்முனைவு" ஆகியவையும் அடங்கியிருக்கும், என்று கல்வி அமைச்சர் கூறினார்,

“விரைவில், பள்ளிகள் அங்கீகாரம் பெறும் ஒரு அமைப்பு இருக்கும். இதில் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுவோம். இதன் மூலம், குழந்தைகள் சேர்க்கப்படும் பள்ளியின் நிலைப்பாடு பெற்றோருக்கு தெரியும்,'' என்றும் அமைச்சர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Iit Madras
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment