Advertisment

NLC Jobs; என்.எல்.சியில் 85 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 85 பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NLC

என்.எல்.சி வேலைவாய்ப்பு

தமிழகத்தில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 85 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 09.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சியில், தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தமிழகத்தில் உள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, என்.எல்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 85 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

Fresher Apprenticeship

மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 85

Fitter – 20

Electrician – 20

Welder – 20

கல்வித் தகுதி: 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: முதலாம் ஆண்டு ரூ. 8,766, இரண்டாம் ஆண்டு ரூ. 10,019

Medical Lab Technician Pathology – 15

Medical Lab Technician Radiology - 10

கல்வித் தகுதி: 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பில் உயிரியல் அல்லது அறிவியல் குரூப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: முதலாம் ஆண்டு ரூ. 8,766, இரண்டாம் ஆண்டு ரூ. 10,019

வயது தகுதி: 01.06.2023 அன்று 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 15-24 மாதங்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nlcindia.in என்ற இணையதளத்தில் ON LINE REGISTRATION FORM ல் பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்தினை PRINT எடுத்துக் கொள்ள வேண்டும்.தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பப் படிவத்தினை கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி: The General Manager, Learning and Development center, NLC India Limited, Neyveli – 607803.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.06.2023

மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/FRESHER-NET%20ADVERTISE-2023-24.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Nlc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment