நீட் எழுதும் மாணவர்களுக்கு : விண்ணப்ப படிவங்கள் பிழை திருத்த புதிய ஏற்பாடு

கல்வித் தகுதி, பிறந்த தேதி, அப்பாவின் பெயர் போன்ற விபரங்களை கவனமுடன் பூர்த்தி செய்யுங்கள்

NTA NEET 2019 to Open Window for Corrections in NEET 2019 Application Form :  இந்த வருடம் நீட் தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்கள் தங்களின் விண்ணப்படிவத்தை ஏற்கனவே பூர்த்தி செய்திருப்பீர்கள். அதில் ஏதேனும் பிழைகள், தவறுதலாக விபரங்கள் பதியப்பட்டிருந்தாலும் அதனை மாற்றுவதற்கான புதிய பக்கத்தினை நீட் இணைய தளத்தில் இணைத்துள்ளது என்.டி.ஏ.

ntaneet.nic.in – இணைய தளத்திற்கு சென்று தங்களின் விண்ணப்படிவத்தில் இருக்கும் பிழைகளை திருத்திக் கொள்ளலாம். தேசிய தேர்வு முகமை ஏற்கனவே கூறியுள்ள வழிகாட்டுதலின் படி உங்கள் விண்ணப்படிவங்களை திருத்திக் கொள்ளலாம்.

தேர்வர்கள் தொடர்ந்து, மேலே கொடுக்கப்பட்டிருக்கும் இணையத்தை அடிக்கடி கவனித்து வந்தால், புதிய பக்கம் வெளியாகும் போது உங்களின் விண்ணப்படிவத்தினை திருத்திக் கொள்ள இயலும்.

இந்த பக்கம் ஜனவரி 31ம் தேதிக்குள் க்ளோஸ் செய்யப்பட்டு விடும். nta.ac.in அல்லது  ntaneet.nic.in என்ற இணைய தளங்களில் சென்று மாணவர்கள் தங்களின் விண்ணப்ப படிவங்களின் பிழைகளை திருத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்க : நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

NTA NEET 2019 Correction Window – விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை

விண்ணப்பங்களில் நீங்கள் கொடுத்திருக்கும் தனிநபர் விபரங்கள் யாவும் சரியாக உள்ளதா என பரிசோதித்துக் கொள்ளவும். உங்களின் பெயர், உங்கள் தந்தை பெயர் ஆகியவை சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என பார்த்துக் கொள்ளவும்.

உங்களின் புகைப்படம் மற்றும் கையெழுத்து இரண்டும் சரியாக புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மீடியம் ஆஃப் இன்ஸ்ட்ரெக்ஸ்சனை தேர்வு செய்யும் போது, மிக்க கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும். ஏன் என்றால், ஆங்கிலத்தை தேர்வு செய்பவர்களுக்கு அதே மொழியில் மட்டும் தான் வினாத்தாள்கள் கிடைக்கும். இதர மொழிகளை தேர்வு செய்பவர்களுக்கு பிராந்திய மொழி மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வினாத்தாள்கள் கிடைக்கும்.

கல்வித் தகுதி, பிறந்த தேதி மற்றும் இதர விபரங்களையும் முழுக்கவனத்தோடு பதிவிடுங்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close