Advertisment

NTA NEET 2020 : நீட் விண்ணப்பிக்க இன்றே கடைசி - தேர்வுமுறை ஹிண்ட்ஸ் இதோ

NTA NEET 2020 Last Date: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே ( டிசம்பர் 31) கடைசி நாள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tndte diploma results

tndte diploma results

NTA NEET 2020 Exam Pattern, Registration Process : தேசிய சோதனை முகமை நடத்தும் (என்.டி.ஏ) இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே( டிசம்பர் 31) கடைசி நாளாகும். ஆர்வமுள்ள, தேர்வர்கள் ntaneet.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று  விண்ணப்பிக்கலாம்.

Advertisment

நீட் தேர்வு, 2020ம் ஆண்டு  மே 3ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கிறது. கணினித் தேர்வு போலன்றி  பேப்பர்/பேனா  முறையில் நடைபெறும்.

நீட் தேர்வு: எவ்வாறு படிப்பது ? வல்லுனர்களின் பதில்கள் இங்கே

தற்போது, பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தைத் திருத்துவதற்கான ஆன்லைன் வசதி, வரும் ஜனவரி மாதம் 15 முதல் 31 நாள் வரை திறந்திருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட  மாற்றங்கள் மட்டுமே திருத்த அனுமதிக்கப்படும் என்பதையும்  தேர்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.  எனவே, முதல் முயற்சியிலேயே ஒருவர் படிவத்தை சரியாக நிரப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இந்த ஆண்டு, இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான ஒற்றை சாளர தேர்வாக நீட் மாறியிருக்கிறது.

 

நீட் 2020: தேர்வு முறை

முன்பை விட அதிகப்படியான கல்லூரிகளுக்கு(ஜிப்மர்,எய்ம்ஸ்)  இந்த தேர்வு செல்லுபடியாகும் என்று அறிவிக்கபப்ட்டாலும்  முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது அதன் தேர்வு முறையில் மாற்றவில்லை. நீட் 2020 வினாத்தாளில் 180 மல்டிபல் சாய்ஸ் கேள்விகள் (MCQ) இருக்கும். அதாவது, ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு விருப்பங்களில் ஒரு சரியான பதிலை தேர்வர்கள் தேர்வு செய்ய வேண்டும் . இயற்பியல், வேதியியல் உயிரியல் போன்றவைகளில் இருந்து கேள்விகள் கேட்க்கப்படும்.

2019ல் யுபிஎஸ்சி-நுழைவுத் தேர்வுகளில் சாதித்த தேர்வர்களின் எழுச்சியூட்டும் கதைகள்

இந்த நீட் தேர்வில் தகுதி பெற,  50 வது சதவீதம் (அ) மதிப்பெண் அடிப்படையில் 701 முதல் 134 மதிப்பெண்கள் பெறவேண்டும் . அரசு பட்டியலில் இடம் பெற்றுள்ள தேர்வர்கள் அளவுகோலில் 40 சதவீத மதிப்பெண்களையும், உடல் ஊனமுற்றோர் (பி.எச்) தேர்வர்கள்,அளவுகோலில் 45 சதவீத மதிப்பெண்களையும் பெற வேண்டும்.

தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை சமர்ப்பிப்பதற்கான ஆன்லைன் வசதி , வரும்  ஜனவரி 1ம் தேதியுடன் நிறைவடைகிறது.

வெளிநாடுகளில் மேற்படிப்பு : நம்மை சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

பொதுவேட்பாளர்கள் ரூ .1500 கட்டணமாகவும், ஈ.டபிள்யூ.எஸ் (EWS)மற்றும் ஓ.பி.சி-என்.சி.எல்(OBC-NLC) தேர்வர்கள் ரூ .1400 கட்டணமாகவும், எஸ்.சி, எஸ்.டி, பி.டபிள்யூ.டி மற்றும் திருநங்கை தேர்வர்கள் ரூ .800 கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment