Advertisment

UGC NET Application 2019: யூ.சி.ஜி, நெட் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

NTA UGC NET 2019 Online Registration Begins Today: வெவ்வேறு செஸனில் ஜூன் 20, 21, 24, 25, 26, 27  மற்றும் 28 ஆகிய தேதிகளில் இத்தேர்வு நடக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNTET Result 2019 Result paper 2 declared

TNTET Result 2019 Result paper 2

 UGC NET 2019 Registration Notification Released: யூ.ஜி.சி, நெட் 2019 தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் ntanet.nic.in. என்ற தளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 30, 2019.

Advertisment

மொத்தம் 91 நகரங்களில் 84 பாடங்களுக்கு இந்த நெட் தேர்வு நடத்தப்படுகிறது. துணை பேராசிரியர் அல்லது, ஜூனியர் ஆய்வாளர் பணிக்கு தகுதித் தேர்வாக கருதப்படும் இதற்கு http://www.nta.ac.in அல்லது ntanet.nic.in. தளங்களில் விண்ணப்பிக்கவும்.

வெவ்வேறு செஸனில் ஜூன் 20, 21, 24, 25, 26, 27  மற்றும் 28 ஆகிய தேதிகளில் இத்தேர்வு நடக்கிறது. ஜூலை 15-க்கு மேல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.ugcnetonline.in. தளத்தில் இருக்கும் புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் தான் கேள்விகள் இடம்பெறும்.

NTA UGC NET 2019

கல்வித் தகுதி 

விண்ணப்பதாரர்கள் முதுகலையில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

முதுகலை இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் 2 வருடங்களுக்குள் அவர்கள் தங்களது படிப்பில் தேர்ச்சி பெற வேண்டும்.

ஜூனியர் ஆய்வாளருக்கான வயது வரம்பு 

இவர்கள் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

துணை பேராசிரியருக்கான வயது வரம்பு 

இவர்களுக்கு வயது வரம்பு கிடையாது.

எப்படி விண்ணப்பிப்பது? 

ntanet.nic.in தளத்தை விசிட் செய்யவும்.

திரையில் தோன்றும் ‘UGC NET 2019 June registration' என்பதை க்ளிக் செய்யவும்.

இப்போது புதிய பக்கம் திறக்கும்.

அதில் உங்களது தனித் தகவல்களை பதிவிட்டு, ரெஜிஸ்டர் செய்யவும்.

பதிவெண்ணைக் கொண்டு லாக் இன் செய்துக் கொள்ளவும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, புகைப்படத்தை பதிவேற்றி, பணம் செலுத்தவும்.

எதிர்கால தேவைகளுக்காக, இறுதியாக கன்ஃபர்மேஷன் பக்கத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment