Advertisment

ONGC வேலைவாய்ப்பு; 3,614 பணியிடங்கள்; ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு; 3,614 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ONGC வேலைவாய்ப்பு; 3,614 பணியிடங்கள்; ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ONGC recruitment 2022 for 3,614 posts apply soon: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஐடிஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisment

இந்தியாவின் முதன்மையான எரிசக்தி நிறுவனம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) ஆகும். இது இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் ஆய்வு மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இது ‘மஹாரத்னா’ மத்திய பொதுத்துறை நிறுவனம் ஆகும். இத்தகைய நிறுவனத்தில் 3,614 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.05.2022

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 3,614

நிரப்பப்படும் பயிற்சி இடங்கள்

Accounts Executive

Office Assistant

Secretarial Assistant

Computer Operator and Programming Assistant (COPA)

Draughtsman (Civil)

Electrician

Electronics Mechanic

Fitter

Instrument Mechanic

Information & Communication Technology System Maintenance (ICTSM)

Laboratory Assistant (Chemical Plant)

Machinist

Mechanic (Motor Vehicle)

Mechanic Diesel

Medical Laboratory Technician (Cardiology and Physiology)

Medical Laboratory Technician (Pathology)

Medical Laboratory Technician (Radiology)

Refrigeration and Air Conditioning Mechanic

Surveyor

Welder

Civil

Computer Science

Electronics & Telecommunication

Electrical

Electronics

Instrumentation

Mechanical  

கல்வித் தகுதி

Accounts Executive, Office Assistant Bachelor’s பணியிடங்களுக்கு Degree in Commerce (B.Com)/ B.A. or B.B.A படித்திருக்க வேண்டும்.

Laboratory Assistant (Chemical Plant) பணியிடங்களுக்கு B.Sc படித்திருக்க வேண்டும்.

Secretarial Assistant பணியிடங்களுக்கு Stenography (English) முடித்திருக்க வேண்டும்.

Computer Operator and Programming Assistant (COPA), Draughtsman (Civil), Electrician, Electronics Mechanic, Fitter, Instrument Mechanic, Information & Communication Technology System Maintenance (ICTSM), Machinist, Mechanic (Motor Vehicle), Mechanic Diesel, Medical Laboratory Technician (Cardiology and Physiology), Medical Laboratory Technician (Pathology), Medical Laboratory Technician (Radiology), Refrigeration and Air Conditioning Mechanic, Surveyor, Welder ஆகிய பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

Civil, Computer Science, Electronics & Telecommunication, Electrical, Electronics, Instrumentation, Mechanical ஆகிய பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : பட்டதாரி பணியிடங்களுக்கு ரூ. 9,000

ஐடிஐ பணியிடங்களுக்கு முதல் வருடம் ரூ. 7,700, இரண்டாம் வருடம் ரூ. 8,050

டிப்ளமோ பணியிடங்களுக்கு ரூ. 8,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://apprenticeshipindia.org/ அல்லது https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு; 696 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.05.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ongcindia.com/wps/wcm/connect/41e15bb5-21b3-4503-831c-212287ba05ac/NAPS2022-23.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-41e15bb5-21b3-4503-831c-212287ba05ac-o1Gdj1b என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs Central Government Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment