Advertisment

சற்று நேரத்தில் வெளியாக இருக்கும், பெரியார் பல்கலைக்கழக தேர்வு ரிசல்ட்

Periyar University UG, PG November Result 2019 : பெரியார் பல்கலைகழகத்தில் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள், 2020, ஜனவரி 6ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
scholarships available for engineering students

scholarships available for engineering students

பெரியார் பல்கலைகழகத்தில் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள்,  இன்று (ஜன.6) தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Periyar University Results 2019 Live updates : பெரியார் பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம், தமிழகத்தில் உள்ள முன்னணி பல்கலைகழகம் ஆகும். சேலம், நாமக்கல் சுற்றுப்பகுதிகளில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த பல்கலைகழகம் மூலமாகவே, கல்விச்சான்றிதழ், பட்டம் வழங்கப்பட்டு வருகிறது.

பல்கலைகழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் நவம்பர் மாதம் நடைபெற்ற இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளின் செமஸ்டர் தேர்வு முடிவுகள், 2020 ஜனவரி 6ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள், ஜனவரி 2ம் தேதி வெளியாகும் என்ற தகவலுக்கு மறுப்பு தெரிவித்த பெரியார் பல்கலைகழக தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அலுவலர் கதிரவன். விடைத்தாள்கள் திருத்தும் பணி சமீபத்தில் தான் நிறைவடைந்துள்ளது. தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளோம். தேர்வுமுடிவுகளை எவ்வித தவறோ, தடங்கலோ இல்லாமல் வெளியிட தீர்மானித்துள்ளதால் மட்டுமே, இந்த தாமதம் என்றும், 6ம் தேதி, பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அவர் கூறினார்.

பெரியார் பல்கலைகழக அதிகாரப்பூர்வ இணையதளம்

தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது?

பல்கலைகழக இணையதளத்திற்கு செல்லவும்.

இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் Periyar University UG/PG result November 2019 students log-in என்ற பிரிவை தெரிவு செய்யவும்

புதிய பக்கம் திறக்கப்படும்

அதில் பதிவு எண்ணை பதிவிடவும்

பின் தேர்வு முடிவுகள் குறித்த லிங்க் திரையில் தோன்றும்.

மாணவர்கள், இந்த தேர்வு முடிவு பக்கத்தை பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும். மதிப்பெண் சான்றிதழ் வரும்வரை இதனை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் (Ph.D). படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு விண்ணப்ப படிவமும், பல்கலைகழக இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு, 2019 டிசம்பர் 31ம் தேதி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Periyar University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment