Advertisment

10ம் வகுப்பு தேர்ச்சி போதும், ரயில்வே துறையில் அப்ரென்டிஷிப் வேலை

ரயில்வே துறையில் 2,792 அப்ரென்டிஷிப் பணி: இதற்கென்று தனியாக எந்த தேர்வும், நேர்கானலும் நடத்தப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
RRC Recruitment 2020, RRB Apprenticeship , 2792 post

RRC Recruitment 2020, RRB Apprenticeship , 2792 post

ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (ஆர்.ஆர்.சி) 2,792 அப்ரென்டிஷிப்  பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . இதற்கான விண்ணப்ப செயல்முறை வரும் 14 ஆம் தேதி முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மொத்த எண்ணிக்கை: 2,792

ஜமல்பூர் வொர்க்ஷாப் - 684

ஹவுரா பிரிவு - 659

சீல்தா பிரிவு - 526

அசன்சோல் பிரிவு - 412

காஞ்ச்ரபரா வொர்க்ஷாப்  - 206

லிலுவா வொர்க்ஷாப் - 204

மால்டா பிரிவு - 101

யார்  விண்ணபிக்கலாம்:  இந்திய நாட்டினர் யார் வேண்டுமானாலும் இதற்கு விண்ணபிக்கலாம்.  

தேர்வு முறை:  இந்த அப்ரென்டிஷிப்  பணிக்காக தனியாக எந்த தேர்வும், நேர்கானலும் நடத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ ஆகியவற்றில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை மார்ச் 30 ஆம் தேதி  அறிவிக்கப்படும்.

இஸ்ரோ யுவிகா இளம் விஞ்ஞானி : விண்ணப்பம் செய்வது எப்படி?

கல்வித்தகுதி :   தேர்வர்கள் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்புகளில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : வேட்பாளர்களின் குறைந்தபட்ச வயது 15 வயதாக இருக்க வேண்டும், அதிகபட்ச வயது 24 ஆகவும் இருக்க வேண்டும்.

எஸ்சி/எஸ்டி பிரிவு தேர்வர்களுக்கு, உயர் வயது வரம்பில் ஐந்து ஆண்டுகள் தளர்வு கொடுக்கபடுகின்றன. ஓபிசி-என்சிஎல் பிரிவு தேர்வர்களுக்கு மூன்று ஆண்டுகளும், PwBD  தேர்வர்களுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளன.

கட்டணம்: பொது வகை வேட்பாளர்கள் ரூ .100 கட்டணம் செலுத்த வேண்டும்; எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி மற்றும் பெண் வேட்பாளர்கள் எந்த கட்டணத்தையும் சமர்ப்பிக்க தேவையில்லை.

Rrb
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment