மாதம் ரூ.9.36 லட்சம் சம்பளம் ; எம்.எஸ்.சி., பி,இ., பி.டெக் பட்டதாரிகளே விரைவீர்...

IBPS : வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் (IBPS) நிரப்பப்பட உள்ள Analyst Programmer மற்றும் Research associate பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் (IBPS) நிரப்பப்பட உள்ள Analyst Programmer மற்றும் Research associate பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வரவேற்கப்படுகிறார்கள்.

பணியின் பெயர் : Analyst Programmer (Linux), Analyst Programmmer (Windows)

பணியிடங்கள் : 03

கல்வித்தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம் : 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.7,56,440 வரை

பணியின் பெயர் : Research Associate

பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி : Psychology, Education, Management பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,36,020 வரையில்

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.07.2019

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

தேர்வு : ஆகஸ்ட், 2019 ( தேதி விரைவில் அறிவிக்கப்படும்)

விண்ணப்பிக்கும் முறை : www.ibps.in என்னும் தேர்வு வாரிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவம் வைத்துக்கொள்ளவும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close