இந்திய ரயில்வே Revised RRB ALP தேர்வு முடிவுகள் அறிவிப்பு

இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும் தேர்வர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கு தயாராகலாம்

Revised RRB ALP Exam Results : இந்தியன் ரயில்வே போர்டின் ALP (அசிஸ்டெண்ட் லோகோ பைலட் – Assistant Loco Pilot) தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. ஆர்.ஆர்.பியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தேர்வு முடிவுகளும், தேர்வில் வெற்றி பெற்றவர்கள் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இதற்கு முன்பு வரை எழுத்துத் தேர்வுகள் மட்டுமே நடைபெற்று வந்தன.

ஆனால் இந்த முறை இந்த தேர்வுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டது. revised RRB ALP என்று அழைக்கப்படும் இந்த தேர்வின் முதற்கட்ட தேர்வுகள் Computer Based Test (CBT) இந்த வருடம் நவம்பர் 9ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 4ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 47.56 லட்சம் தேர்வர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க : இந்திய ரயில்வேயின் RPF காவலராக பணியாற்ற ஒரு அரிய வாய்ப்பு

இதில் தேர்வு பெற்றவர்கள் இரண்டாம் நிலை கணினி தேர்வினை எழுத உள்ளனர். முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்ற 36 லட்சம் தேர்வர்களின் தகவல்கள் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. ஆனால் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக மறு ஆய்வு செய்யப்பட்டு தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Revised RRB ALP Exam Results – தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது ?

இங்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்குகளை க்ளிக் செய்தால், ஆர்.ஆர்.பியின் இணையத்தில் ஒரு பி.டி.எஃப். ஃபைல் ஓப்பன் ஆகும். உங்களின் தேர்வு எண், அந்த பி.டி.எஃப்.இல் இடம் பெற்றிருந்தால் நீங்கள் இதன் அடுத்த கட்ட தேர்விற்கு தயாராகலாம்.

  1. ஆர்.ஆர்.பி சென்னை தேர்வு முடிவுகள் –  RRB ALP Exam Results
  2. ஆர்.ஆர்.பி திருவனந்தபுரம் தேர்வு முடிவுகள் – RRB ALP Exam Results

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Education-jobs news in Tamil.

×Close
×Close