10 ஆவது பாஸா? ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ரயில்வேயில் வேலை!

RPF recruitment 2019 : ரூ. 8460 முதல் ரூ 20200 வரை மாதச் சம்பளம்

10 ஆவது தேர்ச்சி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் வேலை தேடி அலைகிறீர்களா? இதோ உங்களுக்கு கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பு. ஆர்.பி.எஃப் – யில் 798 பணியிடங்கள் நிரப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியன் ரயில்வேஸ் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிவிப்பில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
798 இடங்களுக்கான தேர்வினை நடத்த, ஜனவரி 1 2019 தேதியில் இருந்து விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதனை பூர்த்தி செய்து வரும் ஜனவரி 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தாரகள் சமர்பிக்க வேண்டும்.

தகுதி விபரங்கள்:

அடிப்படை கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 18-25 வயதுடையவராக இருத்தல் அவசியம். ஏற்கனவே ரயில்வேயில் ஏதேனும் ஒரு தேர்வினை எழுதி, அதற்கான முடிவுகளுக்காக காத்திருப்பவர்கள் இந்த தேர்வினை எழுத இயலாது.ரயில்வே சிறப்பு பாதுகாப்புப்படை காவல் பணியிடங்களில் 10% இடம் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணினி மூலம் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மற்றும் சான்றிதழ்கள் சரிபார்த்தல் என ஒவ்வொரு படி நிலையாக இந்த தேர்வுகள் நடத்தப்படும். கணினி தேர்வானது 15 இந்திய மொழிகளில் நடத்தப்பட உள்ளதால், தேர்வர்கள் தைரியமாக தேர்வுக்கு தயாராகலாம்.

இதற்கான தேர்வுகள் பிப்ரவரி / மார்ச் ஆகிய மாதங்களில் நடைபெறும்.

சம்பள விவரம்:

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ. 8460 முதல் ரூ 20200 வரை மாதத் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அப்ளிகேஷன்களை பெற விண்ணப்பதாரர்கள் ரூ.400 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ. 250 செலுத்த வேண்டும்.

சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் செவிலியர் வேலை வேண்டுமா?

விவரங்களை தெரிந்துக் கொண்டால் மட்டும் போதாது. உடனே //constable.rpfonlinereg.org/home.html தளத்திற்கு சென்று இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Education-jobs news in Tamil.

×Close
×Close