RRB group D result: இன்று 3 மணிக்கு ஆர்.ஆர்.பி குரூப் டி தேர்வு முடிவுகள் வெளியீடு

RRB Group D 2019 Result: பொதுப் பிரிவினருக்கு 40%, எஸ்.சி - எஸ்.டி 30% என குறைந்தப் பட்ச மதிப்பெண்களை பெற வேண்டும்.

RRB group D result: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்.ஆர்.பி குரூப் டி தேர்வு முடிவுகளை இன்று வெளியிடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.

மொத்தம் 62,907 காலியிடங்களை நிரப்புவதற்காக இத்தேர்வு நடத்தப்பட்டது. இதற்கு 1.8 கோடிக்கும் மேலானவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் உடற்தகுதி தேர்விலும், மருத்துவ பரிசோதனையிலும் பங்கெடுக்க வேண்டும்.

இதன் பிறகு அவர்கள் பணியமர்த்தப் படுவார்கள். ஆர்.ஆர்.பி-யின் குரூப் டி லெவலில் பணியமர்த்தப்படுபவர்களுக்கு 18,000 சம்பளம் வழங்கப்படும். அதோடு அலோவன்ஸ் மற்றும் இதர சலுகைகளும் வழங்கப்படும்.

RRB group D result 2018-19: மதிப்பெண் தகுதி 

பொதுப் பிரிவினருக்கு 40%, எஸ்.சி – எஸ்.டி 30% என குறைந்தப் பட்ச மதிப்பெண்களை பெற வேண்டும்.

RRB group D result 2018-19: உடற்தகுதி 

ஆண்கள் – 35 கிலோ எடையை தூக்கிக் கொண்டு, 100 மீட்டரை 2 நிமிடத்தில் அடைய வேண்டும். 1000 மீட்டரை 4 நிமிடம் 15 வினாடிகளுக்குள் கடக்க வேண்டும்.

பெண்கள் –  20 கிலோ எடையை தூக்கிக் கொண்டு, 100 மீட்டரை 2 நிமிடத்தில் அடைய வேண்டும். 1000 மீட்டரை 5 நிமிடம் 40 வினாடிகளுக்குள் அடைய வேண்டும்.

RRB group D result 2018-19: எப்படி பதிவிறக்கம் செய்வது? 

பிரவுஸரை திறக்கவும்.

அதிகாரப்பூர்வ மண்டல இணைய தளத்தை விசிட் செய்யவும்.

‘RRB group D result’ என்பதை க்ளிக் செய்யவும்.

இப்போது புதிய பக்கம் திறக்கும்.

லாக் இன் செய்யவும்.

இப்போது தேர்வு முடிவு திரையில் தோன்றும்.

www.rrbchennai.gov.in என்ற தளத்தின் மூலம் தமிழக மாணவர்கள் தங்களது ஆர்.ஆர்.பி குரூப் டி தேர்வு முடிவை தெரிந்துக் கொள்ளலாம்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

×Close
×Close