ஆர்.ஆர்.பி. குரூப் D முடிவுகள் பிப்ரவரி 13ம் தேதி வெளியீடு...

ஆட்சேபனைகள் தெரிவிக்க விரும்புபவர்கள் ஜனவரி 14 முதல் 19ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.

RRB Group D Results 2018 : கடந்த வருடம் செப்டம்பர் 17ம் தேதி துவங்கி டிசம்பர் 17ம் தேதி வரை 1.89 கோடி, இந்திய ரயில்வேயில் காலியாக இருந்த பணியிடங்களுக்காக குரூப் டி தேர்வுகள் நடத்தப்பட்டன.

இதில் கலந்து கொண்டு தேர்வு எழுதியவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டுள்ளனர்.  இந்நிலையில், வினாத்தாள்கள் குறித்த ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றை தெரிவிக்கலாம் என்று இந்த மாதத்தின் ஆரம்பத்திலேயே தேர்வு மையம் அறிவித்திருந்தது.

மேலும் படிக்க : நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…  விண்ணப்ப படிவங்கள் பிழை திருத்த புதிய ஏற்பாடு

RRB Group D Results 2018

ஆட்சேபனைகள் தெரிவிக்க விரும்புபவர்கள் ஜனவரி 14 முதல் 19ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.  ஆட்சேபனைகள் ஏதும் இல்லாத பட்சத்தில் இறுதி விடைகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.  ஆட்சேபனைகள் தெரிவிக்க விரும்புபவர்கள் ஆங்கிலத்தில் தான் கேள்வி எழுப்ப வேண்டும் என்று கூறியுள்ளது ஆர்.ஆர்.பி.

பிப்ரவரி மாதம் 13ம் தேதி இந்த தேர்வுகளின் முடிவுகள் வெளியாகின்றன. அதற்கு முதல்நாள் இரவில் அனைத்து பிராந்திய இணைய தளத்திலும் வெளியிடப்படும் என்று அங்கராஜ் மோகன் தெரிவித்துள்ளார்.  இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உடல் தகுதி தேர்விற்கு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Education-jobs news in Tamil.

×Close
×Close