Advertisment

RRB JE Recruitment 2018: ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு! என்ன நீங்க ரெடியா?

RRB JE Recruitment Notification Released on Official Website : அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
RRB NTPC Registration 2019, exam date and admit card news

RRB NTPC Registration 2019, exam date and admit card news

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதோடு புதிய பணியிடங்களையும் உருவாக்கவும் பணி வேகமாக நடைப்பெற்று வருகிறது.

Advertisment

அந்தவகையில் ரயில்வே துறையில் உள்ள அடிப்படை பணியிடங்கள் முதல் தொழில்நுட்ப பிரிவு வரை பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அந்தவகையில் கணினி திறனை சோதிக்கும் ஆர்.ஆர்.பி குரூப் சி மற்றும் குரூப் டி தேர்வு கடந்த டிசம்பர் 14ம் தேதி நடைபெற்றது.

இதில் இந்தியா முழுவதும் 1.49 கோடி பேர் தேர்வு எழுதினர். அதன் படி இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் இணையதளத்தில் இதற்கான முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரும் டிசம்பர் 29 ஆம் ரயில்வே துறையில் ஜேஇ பிரிவு தேர்வின் முடிவுகள் வெளிவருகின்றன என தகவல்கள் பரவி வருகின்றன.

தேர்வு தொடர்பான முடிவுகள் வெளிவரும் தேதியை தெரிந்துக்கொள்ள ஆர்.ஆர்.பி பிராந்திய இணையதளத்தை தொடர்ந்து கண்காணித்து வருமாறு இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரிய தேர்வு எழுதியவர்களை கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கிடையில் கணினி திறனை சோதிக்கும் ஆர்.ஆர்.பி குரூப் டி தேர்வு முடிவுகள் ஜனவரியில் வெளிவரலாம் என்றும், அதற்குரிய பதில்கள் தனிதனித் தொகுப்பாக வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் (indianrailways.gov.in) என்ற இணையத்தில் விண்ணபிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்புப் படை காவலராக பணியாற்ற விருப்பமா?

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜன.,2, 2019 காலை 10.00 மணிமுதல் ஜன.,31 இரவு 11.59 வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆன்லைனின் தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம். SC/ST பிரிவினருக்கு ரூ. 250. பிற பிரிவினருக்கு ரூ. 500. எஸ்பிஐ வங்கி சலானிலும் தேர்வுக்கட்டணத்தை அனுப்பலாம்.

இதில் வங்கிக் கட்டணம் தவிர குறிப்பிட்ட தொகை திருப்பி அனுப்பப்படும். விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்களில் தவறு இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். முன்னாள் இந்திய ராணுவவீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு உண்டு. இதற்கான கணினித் தேர்வு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களை அழைக்கிறது இஸ்ரோ நிறுவனம்!

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment