/indian-express-tamil/media/media_files/2025/03/02/uHKFsysRUXxG5tL9bbA6.jpg)
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) சிறப்பு அதிகாரிகள் (Specialist Cadre Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 59 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Manager (Products – Digital Platforms)
காலியிடங்களின் எண்ணிக்கை: 34
கல்வித் தகுதி: B.E. / B. Tech. in IT/ Computers/ Computer Science/ Electronics/ Electrical/ Instrumentation/ Electronics & Telecommunication or Master of Computer Applications (MCA) படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 31.08.2025 அன்று 28 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 85920-2680/5-99320-2980/2-105280
Deputy Manager (Products – Digital Platforms)
காலியிடங்களின் எண்ணிக்கை: 25
கல்வித் தகுதி: B.E. / B. Tech. in IT/ Computers/ Computer Science/ Electronics/ Electrical/ Instrumentation/ Electronics & Telecommunication or Master of Computer Applications (MCA) படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 31.08.2025 அன்று 25 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 64820-2340/1-67160-2680/10-93960
வயது வரம்பு தளர்வு: எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி (PWD) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் நிரப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.sbi.co.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.10.2025
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, ஓ.பி.சி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் இராணுவத்தினர் பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us