Advertisment

2017ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்விலும் முறைகேடா?

டிஎன்பிஎஸ்சி 2017ம் ஆண்டு நடத்திய `குரூப்-2' தேர்விலும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது வலுவாக எழுந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC Exam Scam, TNPSC 2020

TNpsc Group I preparation, Syllabus, Tnpsc Group I Current Affairs

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்ட்டது.  இறுதி தேர்வு பட்டியலில் இருந்து அவர்களை நீக்கியதோடு மட்டுமின்றி, அரசு  தேர்வு எழுத வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது

Advertisment

இந்நிலையில்,  டிஎன்பிஎஸ்சி 2017ம் ஆண்டு நடத்திய `குரூப்-2' தேர்விலும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது வலுவாக எழுந்துள்ளது.

2017ம் ஆண்டிற்கான `குரூப்-2' தேர்வு அறிவிப்பை 27.04.2017 அன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்தத் தேர்வின் மூலம் நேர்முகத் தேர்வு அல்லாத முறையில் 1,953 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் .

3 மாதங்கள் எஞ்சியுள்ளன, நீட் தேர்வுக்கு எப்படி தயாராவது?

குரூப்-4 முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களில் இருந்து 2017 ஆம் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வில் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர் . கடைசியாய் வந்த தகவலின் படி, ராமேஸ்வரம் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய தேர்வு மையங்களில் இருந்து மட்டும் 37 பேர் குரூப் 2 தேர்வில் தேர்வாகி உள்ளனர்.

 

publive-image நியூஸ் 7 தமிழ்

publive-image குரூப் 4 தேர்வு முறைகேடு

 

குரூப் -2 தேர்வு:

இந்த  தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தலைமைச் செயலகம், தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம்,  தொழில் மற்றும் வணிகத்துறை, பதிவுத்துறை, தொழிலாளர் நலத்துறை, மீன்வளத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நில அளவைத்துறை, உணவு வழங்கல்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை, இந்துசமய அறநிலையத்துறை, பள்ளி, கல்வித்துறை, வனத்துறை மற்றும் வணிகவரித் துறை போன்றவற்றில் உதவியாளராகப் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

உண்மையாய், முறைகேடுகள் நடந்தால் மிகப்பெரிய சவால் தேர்வாணையத்துக்கு காத்திருக்கின்றது. அப்போது முறைகேடுகளில் (ஒருவேளை )தேர்வாகிய தேர்வர்கள் இன்று ஏதோ ஒரு அரசு துறைகளில் பணியாற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டி.என்.பி.எஸ்.சி ஊழலில் இதுவரை 12 பேர் கைது: ‘மேஜிக் பேனா’ கொடுத்த ஜெயகுமாருக்கு வலைவீச்சு

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment