scorecardresearch

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 8 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

jobs
அரசு வேலைவாய்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாவலர், தரவு உள்ளீட்டாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பட உள்ளன. மொத்தம் 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

ஆலோசகர் (Counsellor)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : Bachelor’s degree in Social work/ Public Administration/ Psychology/ Sociology/ Home Science/ Hospital and Health Management படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 18,000

பாதுகாவலர் (Security)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

தரவு உள்ளீட்டாளர் (Data entry operator)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கணினி சார்ந்த படிப்பு (Diploma in computer applications) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,500

பாதுகாப்பாளர் (Cemonc Security)

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multipurpose Health workers)

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

பிஸியோதெரபிஸ்ட் (Physiotherapist)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : Bachelor Degree in Physiotherapist படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,000

மருத்துவமனை மேலாண்மை அலுவலர் (Quality Manager)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : Master in Hospital Administration/ Health Management/ Master of Public Health படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 60,000

OT Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : OT Technician course படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

Optometrists

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : Bachelor Degree in optometry or Master in optometry படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 14,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2023/04/2023041263.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : முதல்வர், அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிவகங்கை

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.04.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2023/04/2023041251.pdf என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Sivagangai health department jobs application for various posts