Advertisment

சிவகங்கை சுகாதாரத்துறையில் வேலை; 12th , டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Sivagangai Health Dept invites application for various posts: சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு; 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆவடி OCF நிறுவனத்தில் 180 பணியிடங்கள்; 10th, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சிவகங்கை மாவட்ட சுகாதாரச் சங்கம், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் தற்காலிக அடிப்படையில் ஆய்வக நுட்பனர், மருந்தாளுநர், மேற்பார்வையாளர், உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 06.12.2021க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

ஆய்வக நுட்பனர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வித் தகுதி : அறிவியல் பாடத்துடன் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் ஆய்வக நுட்புனர் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000

மருந்தாளுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி : மருந்தாளுநர் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும். (B.Pharm/D.Pharm)

சம்பளம் : ரூ. 15,000

முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் சுகாதார ஆய்வாளர் படிப்பு (Sanitary Inspector course) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

வயது வரம்பு : 65 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது சுய விவர விண்ணப்பக் கடிதத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

முகவரி :

துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (காசநோய்) அலுவலகம், மாவட்ட காசநோய் மையம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், சிவகங்கை – 630561.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.12.2021

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment