Advertisment

SSC CGL 2019: எஸ்எஸ்சி தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு முக்கிய அப்டேட்ஸ்

SSC CGL 2019 Notification: இதற்கான தேர்வு 2020ம் ஆண்டு  மார்ச் 2 முதல் 11 வரை நடத்தப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SSC CGL 2019-20 notification: எஸ்.எஸ்.சி சிஜிஎல் 2019 அறிவிப்பு

SSC CGL 2019-20 notification:  மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்தப் பட்டதாரி நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நவம்பர் 25ம் தேதி இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். தேர்வர்கள் கடைசி நாள் வரை தாமதிக்காமல், முன் கூட்டியே விண்ணபிக்க வேண்டும் என்று தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisment

ஏனெனில், கடைசி நேரத்தில் அனைவரும் விண்ணப்பிக்க வருவதால், ஆன்லைன் சர்வர் மிகவும் தாமதமாக இயங்க, அல்லது செயலற்று போக வாய்ப்புள்ளதாக தேர்வாணையம் கருதுகிறது.

 

இதற்கு முன் நடத்த தேர்வு விண்ணப்பிக்கும் போது, கடைசி நாட்களில் தேர்வாணைய இணையதளம் செயலற்று இருந்ததை நாமும் அறிந்திருப்போம். எனவே, ஆர்வமுள்ள தேர்வர்கள் கால தாமதம் செய்யாமல் உரிய நேரத்தில் விண்ணப்பத்தை ஆன்லைனில் நிரப்புமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்

விண்ணப்ப செயல்முறைக்கான இறுதி தேதி -  நவம்பர் 25, 2019  ஆர்வமுள்ள வேட்பாளர்கள்- ssc.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான தேர்வு 2020ம் ஆண்டு  மார்ச் 2 முதல் 11 வரை நடத்தப்படும் என்று தேர்வாணையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

பயிற்சித் தேர்வுக்கு இங்கே கிளிக் செய்யவும் 

எஸ்எஸ்சி சிஜிஎல் 2019: தேர்வு முறை

tier- I தேர்வில் 100 கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண் அளிக்கப்படும். தவறான பதில்களுக்கு 0.50 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

tier - I தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள், tier-II, tier-III, ஸ்கில் டெஸ்ட் போன்றவைகளில் தேர்ச்சி பெற வேண்டும்.

Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment