Advertisment

எஸ்.எஸ்.சி ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) தேர்வு : 4,726 பணிகளுக்கு உடனே விண்ணப்பியுங்கள்

SSC CHSL Recruitment application : விண்ணப்பங்களை ssc.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 15 கடைசி நாளாகும்

author-image
WebDesk
New Update
எஸ்.எஸ்.சி ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) தேர்வு : 4,726 பணிகளுக்கு உடனே விண்ணப்பியுங்கள்

SSC CHSL Recruitment 2020: மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்களில் இளநிலை எழுத்தர் (எல்டிசி) / இளநிலை செயலக உதவியாளர் (ஜேஎஸ்ஏ), அஞ்சல் உதவியாளர் (பிஏ) / அஞ்சல் பிரிப்பு உதவியாளர் (எஸ்ஏ), தரவு உள்ளிடும் பணியாளர் (டிஇஓ) என  மொத்தம் 4,726  பதவிகள் நியமனத்திற்கான ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) தேர்வு 2020-க்கான அறிவிக்கையைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

Advertisment

விண்ணப்பங்களை ssc.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 15 கடைசி நாளாகும்.

காலி பணியிடங்கள்:

இளநிலை எழுத்தர் (எல்டிசி) / இளநிலை செயலக உதவியாளர் (ஜேஎஸ்ஏ) - 1,538 ;

அஞ்சல் உதவியாளர் (பிஏ) / அஞ்சல் பிரிப்பு உதவியாளர் (எஸ்ஏ) - 3,181

தரவு உள்ளிடும் பணியாளர் (டிஇஓ) - 7

விண்ணப்பக் கட்டணம்: 100 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அனைத்து பெண் விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அரசு உத்தரவுகளின்படி இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற தகுதி உடைய எஸ் சி / எஸ் டி / முன்னாள் படைவீரர் / போர் வீரர்களின் விதவையர் உள்ளிட்ட பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: அடுக்கு(Tier)-1 தேர்வு நாடு முழுவதும் 2021    ஏப்ரல் 12 முதல் 27 தேதிகளில் நடைபெறும். இதில், தேர்ச்சி பெறுபவர்கள், அடுக்கு( Tier)- II தேர்வில் கலந்து கொள்வார்கள்.

Tier- I தேர்வு:

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Ssc Central Government Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment