Advertisment

எஸ்எஸ்சி தேர்வு: மார்ச் 17-ல் தொடக்கம், அட்மிட் கார்டு எப்போது?

அட்மிட் கார்டு பற்றிய தகவல் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI Clerk Exam, last Date to apply SBI Clerk Exam

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், கணினி வழியிலான ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) அளவிலான ப்ரிலிம்ஸ் தேர்வை (நிலை- I) வரும் மார்ச் 17 முதல் 28-ம் தேதி வரை நடத்தவுள்ளது.

Advertisment

அனுமதி சீட்டு எப்போது:   இத்தேர்வுக்கான மின்னணு அனுமதிச் சீட்டினை தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்கள் முன்பிருந்து தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது பற்றிய தகவல் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளது.

தென் மண்டலத்தில் (ஆந்திரா, தெலுங்கான, தமிழ்நாடு) இந்த தேர்வு முறையே 17.03.2020, 18.03.2020, 19.03.2020, 20.03.2020, 23.03.2020, 24.03.2020, 26.03.2020, 27.03.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும். நாளொன்றுக்கு 3 ஷிப்டுகளாக தேர்வு நடைபெறும் – முதல் ஷிப்டு காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், 2-வது ஷிப்டு பிற்பகல் 1 மணி முதல் 2.00 மணி வரையிலும், 3-வது ஷிப்டு மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறும்.

தேர்வு மையங்கள்: தென்மண்டலத்தில் 3,91,307 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வு 20 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 41 மையங்களில் நடத்தப்படும். அவை ஆந்திர மாநிலத்தில் சிராலா. குண்டூர், காக்கிநாடா, கர்னூல், நெல்லூர், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரத்தி்லும்; தெலங்கானாவில் ஐதராபாத், கரீம்நகர் மற்றும் வாரணங்கல்லிலும்; தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி. திருநெல்வேலி மற்றும் வேலூரிலும் நடைபெறுகிறது.

அடிப்படைத் தகவல்கள்:  கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், துண்டுச்சீட்டுகள், மின்னணு சாதனங்கள் (செல்போன், புளூடூத் சாதனங்கள், ஹெட்போன், பேனா, பட்டன்கோல், கேமராக்கள், ஸ்கேனர், கால்குளேட்டர்) போன்ற மின்னணு சாதனங்கள் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. இவற்றை வைத்திருப்போரின் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டு சட்ட ரீதியான / குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வருங்காலத்தில் 3 முதல் 7 ஆண்டுகள் வரை தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும் என்பதால் விண்ணப்பதாரர் இது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களையோ அல்லது பைகளையோ தேர்வுக் கூடத்திற்குள் எடுத்து வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கான மின்னணு அனுமதிச் சீட்டு மற்றும் செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாமல் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்கள் / விளக்கங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தென் மண்டல அலுவலகத்தின் உதவி எண்கள் (044-28251139 மற்றும் செல்போன் 9445195946) தொடர்பு கொள்ளலாம் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தென் மண்டல இயக்குனர் திரு.கே.நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் - PIB

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment