Advertisment

SSC Exam Calendar 2020-21: எஸ்.எஸ்.சி தேர்வு அட்டவணை வெளியீடு, விவரம் உள்ளே

SSC Tentative Examination Calendar:

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ssc exam dates, ssc calendar

ssc exam dates, ssc calendar

SSC CGL, CHSL, JE Exam Dates 2020-21:   மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) 2020-21 கல்வி அமர்வுக்கான அதிகாரப்பூர்வ கால அட்டவனையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு  அட்டவணை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்கிடைக்கின்றன.  2018ம் ஆண்டு ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான (நிலை -III) தேர்வு டிசம்பர் 29, 2019 அன்று நடத்தப்படும்,

Advertisment

2019ம் ஆண்டு ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான (நிலை -1)  தேர்வு 2020ம் ஆண்டு மார்ச் 2 முதல் 11 வரை நடத்தப்படும். நிலை  -2 மற்றும் நிலை  -3 தேர்வுகள்  2020ம் ஆண்டு ஜூன் 22 முதல் ஜூன் 25, வரை நடத்தப்படுகிறது.

 

2019ம் ஆண்டு ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) தேர்வு (நிலை -1) 2020ம் ஆண்டு  மார்ச் 16ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறும் .  இதற்கான, நிலை II தேர்வு ஜூன் 28, 2020 அன்று நடத்தப்படும். இரண்டுமே கணினி அடிப்படையிலான முறையில் நடத்தப்படுகிறது.

மேலும், சில முக்கியத் தேதிகள்: 

எஸ்.எஸ்.சி ஜூனியர் இன்ஜினியர் 2019 தேர்வு (பேப்பர் 1) 2020 மார்ச் 30 முதல் ஏப்ரல் 2 வரை நடத்தப்படும். ஜூனியர் இன்ஜினியருக்கான பேப்பர் II 2020 ஜூன் 21 அன்று நடத்தப்படுகிறது.

ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர், மூத்த இந்தி மொழிபெயர்ப்பாளர் , இந்தி பிரத்யபக் தேர்வு பிப்ரவரி போன்றவைகளுக்கான தேர்வு  அடுத்த ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி அன்று நடத்தப்படுகிறது . ஸ்டெனோகிராஃபர் கிரேடு 'சி' & 'டி' தேர்வு 2020 மே 5 முதல் 7 வரை நடத்தப்படும்.

மல்டி டாஸ்கிங் (நான்- டெக்னிக்கல் ) பணியாளர்கள் தேர்வு 2020 (பேப்பர் -1) க்கான அறிவிப்பு ஜூன் 2, 2020 அன்று வெளியிடப்படும் மற்றும் ஆன்லைன் விண்ணப்பங்கள் 2020 ஜூலை 15 ஆம் தேதியுடன் முடிவடையும். கணினி அடிப்படையிலான தேர்வு அக்டோபர் 26 முதல்  நவம்பர் 13 வரை நடத்தப்படும்.

ஜூனியர் இன்ஜினியர் தேர்வு அறிவிப்பு 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 4, 2020 அன்று வெளியிடப்படும். வேட்பாளர்கள் 2020 செப்டம்பர் 3 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு 2021 பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும்

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment