scorecardresearch

SSC; மத்திய அரசில் 990 உதவியாளர் பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, பி.இ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

மத்திய அரசின் இந்திய வானிலை ஆய்வு மையத்தில் அறிவியல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிப்ளமோ, டிகிரி, பி.இ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

SSC; மத்திய அரசில் 990 உதவியாளர் பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, பி.இ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள அறிவியல் உதவியாளர் (Scientific Assistant) பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிப்ளமோ, டிகிரி, என்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள அறிவியல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.10.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: சென்னையில் மத்திய அரசு வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அறிவியல் உதவியாளர் (SCIENTIFIC ASSISTANT)

காலியிடங்களின் எண்ணிக்கை: 990

கல்வித் தகுதி : Bachelor’s Degree in Science (with Physics as one of the subject)/Computer Science/Information Technology/Computer Applications OR Diploma in Electronics and Telecommunication Engineering படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18.10.2022 அன்று 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination) மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கணினி வழி தேர்வு 100 மதிப்பெண்களுக்கு 2 மணி நேர கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் பொது அறிவு (General Awareness), திறனறிதல் (General Intelligence & Reasoning) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகளும், சம்பந்தப்பட்ட அறிவியல் பாடப்பிரிவில் இருந்து 100 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.10.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_IMD_30092022.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Ssc recruitment 2022 for imd scientific assistant jobs apply soon