வரும் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம்: ஆசிரியர்களிடம் கருத்து கேட்கும் மத்திய அமைச்சர்

SyllabusForStudents2020: எவ்வாறாயினும்,பாடப்புத்தகத்தில், எந்த பகுதியை தக்கவைத்துக் கொள்வது, எந்த பகுதியை அகற்றுவது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

By: Updated: June 10, 2020, 01:20:10 PM

கொரோன பெருந்தொற்று ஊரடங்கால் ஏற்பட்ட வகுப்பு நேர இழப்பை ஈடுசெய்ய புதிய பாடத்திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது. இதுகுறித்து, ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தங்களது கருத்துக்களை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அல்லது தனது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் தெரிவிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வேண்டுகோள் விடுத்தார்.

இழந்த வகுப்பு நேரத்தை ஈடுசெய்ய பாடத்திட்டங்களை திருத்தியமைக்கப்படும் – சி.பி.எஸ்.இ

கொரோனா பொது முடக்கநிலையால் புதிய கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் உருவாகியது. சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத அதிக எண்ணிகையிலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளனர். எனவே, பெற்றோர்கள் பலரும் வரும் கல்வி ஆண்டின் பாடத்திட்டங்களைக் குறைக்கக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சமீபத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் மாநில கல்வி அமைச்சர் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற கூட்டத்தில், டெல்லி துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா, பாடப்புத்தகத்தில் சில பகுதிகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல், நீட், ஜே.இ.இ மெயின் போன்ற நுழைவுத் தேர்வுகளை அடுத்த ஆண்டு ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார்.


எவ்வாறாயினும்,பாடப்புத்தகத்தில், எந்த பகுதியை தக்கவைத்துக் கொள்வது, எந்த பகுதியை அகற்றுவது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதுகுறித்த பரிந்துரைகளை தான் மத்திய அமைச்சர் தற்போது கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்,”மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (@HRDMinistry) அல்லது எனது ( @DrRPNishank) ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் # SyllabusForStudents2020 என்ற ஹஷ்டேகை பயன்படுத்தி தங்களது கருத்தை பகிர்ந்து கொள்ளுமாறு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Education-jobs News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Syllabusforstudents2020 hrd ministry seeks suggestion on syllabus 2020 education news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X