Neet Exam Cut Offs Mark Tamil Update : தேசிய தேர்வு முகம் (NTA) மூலம் மருத்துவ படிப்புக்காக நீட் நுழைவுத்தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் இந்த மாதம் அறிவிக்க வாய்ப்புள்ளது. neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணைதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை சரிபார்க்க முடியும். இந்த முடிவில், சதவிகித மதிப்பெண், மூல மதிப்பெண், அனைத்து இந்திய தரவரிசை போன்றவை காண்பிக்கப்படும். மேலும் கட்-ஆஃப் மதிப்பெண் குறித்து விபரங்களும் காண்பிகப்படும்.
நீட் 2021 இன் கட்-ஆஃப் என்பது UR மற்றும் EWS க்கு 50 வது சதவீதம், OBC / SC / ST க்கு 40 வது சதவீதம், மற்றும் UR-EWS PH க்கு 45 வது சதவீதம், OBC-PH / SC-PH / ST-PH க்கு 40 வது சதவீதமாகும். இதன் அடிப்படையில் நீட் யுஜி கட்-ஆஃப் நிர்ணையம் செய்யப்படும். ஆனாலும், ஒவ்வொரு ஆண்டும் அதற்குரிய மதிப்பெண் பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.
இது குறித்து நிபுனர்கள் கூறியுள்ள பட்டி இந்த ஆண்டு, கட்-ஆஃப் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.இதனால் நீட் 2021 விண்ணப்பதாரர்கள் முந்தைய ஆண்டு நீட் கட்-ஆஃப்-ஐ சரிபார்த்து இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று யோசனை பெறலாம்.
2020 ஆம் ஆண்டிற்கான கட்-ஆஃப்
Category | Qualifying percentile | Marks range | No. of candidates |
UR | 50th percentile | 720 – 147 | 682406 |
OBC | 40th percentile | 146 – 113 | 61265 |
SC | 40th percentile | 146 – 113 | 19572 |
ST | 40th percentile | 146 – 113 | 7837 |
UR-EWS and physically handicapped | 45th percentile | 146 – 129 | 99 |
OBC and physically handicapped | 40th percentile | 128 – 113 | 233 |
SC and physically handicapped | 40th percentile | 128 – 113 | 70 |
ST and physically handicapped | 40th percentile | 128 – 113 | 18 |
Total | 771500 |
2019 ஆம் ஆண்டிற்கான கட்-ஆஃப்
Category | Qualifying percentile | Marks range | No. of candidates |
UR | 50th percentile | 701 – 134 | 704335 |
OBC | 40th percentile | 133 – 107 | 63789 |
SC | 40th percentile | 133 – 107 | 20009 |
ST | 40th percentile | 133 – 107 | 8455 |
UR-EWS and physically handicapped | 45th percentile | 133 – 120 | 266 |
OBC and physically handicapped | 40th percentile | 119 – 107 | 142 |
SC and physically handicapped | 40th percentile | 119 – 107 | 32 |
ST and physically handicapped | 40th percentile | 119 – 107 | 14 |
Total | 797042 |
2018 ஆம் ஆண்டிற்கான கட்-ஆஃப்
Category | Qualifying percentile | Marks range | No. of candidates |
UR | 50th percentile | 691 – 119 | 634897 |
OBC | 40th percentile | 118 – 96 | 54653 |
SC | 40th percentile | 118 – 96 | 17209 |
ST | 40th percentile | 118 – 96 | 7446 |
UR and physically handicapped | 45th percentile | 118 – 107 | 205 |
OBC and physically handicapped | 40th percentile | 106 – 96 | 104 |
SC and physically handicapped | 40th percentile | 106 – 96 | 36 |
ST and physically handicapped | 40th percentile | 106 – 96 | 12 |
Total | 714562 |
2017 ஆம் ஆண்டிற்கான கட்-ஆஃப்
Category | Qualifying percentile | Marks range | No. of candidates |
UR | 50th percentile | 697 – 131 | 543473 |
OBC | 40th percentile | 130 – 107 | 47382 |
SC | 40th percentile | 130 – 107 | 14599 |
ST | 40th percentile | 130 – 107 | 6018 |
UR and physically handicapped | 45th percentile | 130 – 118 | 67 |
OBC and physically handicapped | 40th percentile | 130 – 107 | 152 |
SC and physically handicapped | 40th percentile | 130 – 107 | 38 |
ST and physically handicapped | 40th percentile | 130 – 107 | 10 |
Total | 611739 |
2016 ஆம் ஆண்டிற்கான கட்-ஆஃப்
Category | Qualifying percentile | Marks range | No. of candidates |
UR | 50th percentile | 685 – 145 | 171329 |
OBC | 40th percentile | 678 – 118 | 175226 |
SC | 40th percentile | 595 – 118 | 47183 |
ST | 40th percentile | 599 – 118 | 15710 |
UR and physically handicapped | 45th percentile | 474 – 131 | 437 |
OBC and physically handicapped | 40th percentile | 510 – 118 | 597 |
SC and physically handicapped | 40th percentile | 415 – 118 | 143 |
ST and physically handicapped | 40th percentile | 339 – 118 | 36 |
Total | 410661 |
எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு நீட் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.