Advertisment

10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை... மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி!

tn board 10th result tnresults.nic.in. : தொலைபேசி எண்களுக்குத் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu plus two exam revaluation result

பனிரெண்டாம் வகுப்பு மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள்

10th exam results live : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை (10.8.20) 9:30 மணியளவில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அரசு அறிவித்தது.

Tamil nadu 10th exam results : 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

அதன்படி இன்று காலை http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய இணையத்தளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், மாணவ, மாணவிகள் பள்ளியில் அளித்த தொலைபேசி எண்களுக்குத் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu 10th exam results live : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. மாணவர்கள் வீட்டில் இருந்தப்படியே முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.



























Highlights

    11:19 (IST)10 Aug 2020

    மதிப்பெண் சார்ந்த குறை!

    மதிப்பெண் சார்ந்த குறை இருப்பின் ஆக.17 முதல் 25ந்தேதி வரை www.dge.tn.gov.in-ல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    11:19 (IST)10 Aug 2020

    தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்!

    மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வருகிற 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை செய்துவருகிறது.

    11:18 (IST)10 Aug 2020

    மதிப்பெண் பட்டியல்!

    மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை இன்று காலை 10 மணியில் இருந்து பதிவிறக்கம் செய்து, வைத்துக்கொள்ள அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

    11:17 (IST)10 Aug 2020

    மாவட்டங்கள் விவரம்!

    வேலூர்-50,916

    சென்னை - 49,235

    திருவள்ளூர் - 48,950

    விழுப்புரம் - 46,494 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    11:17 (IST)10 Aug 2020

    தேர்ச்சி எண்ணிக்கை விவரம்!

    10ம் வகுப்பு மாணவர்கள் 9,39,829 பேர் தேர்ச்சி என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் 4,71,759, மாணவிகள் 4,68,070 தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் 6,235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    09:57 (IST)10 Aug 2020

    மாணவர்கள் ஆல் பாஸ்!

    காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மொத்தம்  9.45 லட்சம் மாணவ, மாணவியரின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 

    09:53 (IST)10 Aug 2020

    அரசுத் தேர்வுகள் இயக்ககம்!

    மாணவர்கள் மதிப்பெண் சார்ந்த குறைகள் இருப்பின் ஆக.17-25 வரை பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

    09:49 (IST)10 Aug 2020

    மாணவர்கள் கவனத்திற்கு!

    மதிப்பெண் விவரத்தை tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் அறியலாம்

    09:48 (IST)10 Aug 2020

    காஞ்சிபுரம் முதலிடம்!

    10 ஆம் வகுப்பு தேர்வு முடிவில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 52,741 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    09:45 (IST)10 Aug 2020

    10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தான நிலையில், அரசு அறிவித்தபடி 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

    09:20 (IST)10 Aug 2020

    மதிப்பெண்கள் முறை!

    10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்  மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இன்று வெளியாகும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் வெளியாகும். 

    09:03 (IST)10 Aug 2020

    ஆன்லைனில் தேர்வு முடிவுகள்!

    மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை ஆன்லைனிலும் தெரிந்துக் கொள்ளலாம். அந்த முழு விவரத்தை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள் 10th result online

    08:53 (IST)10 Aug 2020

    தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்!

    மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 17 முதல் 21ம் தேதி வரை பள்ளி தலைமையாசிரிடம் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    08:09 (IST)10 Aug 2020

    எஸ்.எம்.எஸ் முறை!

    மாணலர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கொடுத்துள்ள செல்ஃபோன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.

    10th exam results : ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.

    மதிப்பெண் சார்ந்த குறைப்பாடுகள் ஏதேனும் இருப்பினும் அதுதொடர்பாக ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

    10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஆங்கிலத்தில் தெரிந்துக் கொள்ள

    www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். இது தவிர அனைத்து தலைமை யாசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கான பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணைப் படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்குரிய முன்னேற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷா ராணி, அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    Sslc
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment