Tamil Nadu +2 Class Result 2020: 2020 மார்ச் இல் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியானது.
12ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன. 97.12 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.
TN Board +2 Class 12th Result 2020: Decision on result declaration soon, check websites
11ம் வகுப்பு மார்ச்/ ஜூன் பருவத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2020 பருவத்தில் எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளும் இன்று வெளியானது.
12th result: தமிழ்நாடு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் ‘செக்’ செய்வது எப்படி?
தேர்வு முடிவுகள் மாணவர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Tamil nadu 12th results live updates: 2020 மார்ச் இல் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியானது.
தேர்வு முடிவுகள் மாணவர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Web Title:Tamil nadu 2 class 12th result live updates tn hsc 2 results 2020 tnresults nic in
மறுகூட்டலுக்கு விண்ணப்ப தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்தது. மாணவர்கள் பயிலும் அந்தந்த பள்ளிகள் வழியாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
உலகின் முதல் இணையவழி (B.Sc) நிரலாக்கல் (ப்ரோக்ராம்மிங்), தரவு (டேட்டா சயின்ஸ்) அறிவியலுக்கான இளநிலைப் பட்டப்படிப்பை தொடங்கிய சென்னை ஐ.ஐ.டி அறிமுகப்படுத்தியது.
2020ஆம் ஆண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் தற்போதைய தேர்ச்சியடைந்த மாணவர்கள், இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்
இணையவழிப் பட்டப்படிப்பு மூன்று வெவ்வேறு நிலைகளில் வழங்கப்படும் – அடிப்படை பட்டம் (Foundation programme), டிப்ளமோ பட்டம் (Diploma programme), இளநிலைப் பட்டப்படிப்பு (Degree Programme). இந்தப் பட்டப்படிப்பின் மூன்று நிலைகளில் எந்தவொரு கட்டத்திலும் வெளியேறும் சுதந்திரம் உண்டு என்பதுடன், அவ்வாறு வெளியேறும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி மெட்ராஸிலிருந்து முறையே அடிப்படைச் சான்றிதழ், டிப்ளோமா சான்றிதழ் அல்லது இளநிலைப் பட்டப்படிப்பு சான்றிதழ் கிடைக்கும்.
மேலும், வாசிக்க
12ம் வகுப்பி தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு 9.30 மணிக்கு பிறகு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஜேஇஇ (JEE) முதன்மைத் தேர்வு (Mains) வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரையில் நடைபெறும். முதன்மைத் தேர்வு (Advance) செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறும். நீட் (NEET) தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும்
12ஆம் வகுப்பு தேர்வு முடிவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாவட்டங்கள்
1. திருப்பூர்
2. ஈரோடு
3. கோயம்புத்தூர்
பொறியியல் படிப்புகளுக்கு நேற்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். சான்றிதழ் சரிபார்க்க முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் நேரில் வர வேண்டாம். ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். செப்டம்பர் 17ஆம் தேதி முதல் பொறியியல் கவுன்சிலிங் நடைபெறும். tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், படிக்க
மார்ச் 24 ஆம் தேதி தேர்வு எழுத முடியாத பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 27 ஆம் தேதி தேர்வு நடத்த
அரசு முடிவு செய்துள்ளது. அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்ல போக்குவரத்து வசதி செய்து தரப்படும். நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது
அதிகாரப்பூர்வ தளமான tnresults.nic.in ஐ விசிட் செய்யவும்.
அங்கிருக்கும் லிங்கை க்ளிக் செய்தால், புதிய பக்கம் திறக்கும்.
பதிவெண்ணை பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.
இப்போது உங்களது தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.
இதனை மாணவர்கள் டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2020 மார்ச் இல் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 12-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.