Advertisment

பள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன?

கல்லூரி மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை இரண்டு/மூன்று வாரங்களுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Tamil News Today Live

பி.எட் சேர்க்கைக்கு 56 கல்லூரிகளுக்கு தடை

தமிழகத்தில் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் முழுவதிலும் உள்ள பல்கலைக் கல்லுரிகள், அரசு, அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளிலும் இரண்டாம், மூன்றாமாண்டு மற்றும் முதுகலை மாணவ, மாணவியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது.

Advertisment

கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்லூரிகள் மீண்டும் திறப்பு எப்போது என்று உறுதியாக சொல்ல முடியாத நிலையில்,    450 மணி நேர வகுப்புகளுக்குள் செமஸ்டர் பாடத் திட்டங்களை முடிக்கும் வகையில், கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட்  மூன்றாம் தேதியில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று தமிழக உயர்க்கல்வித்துறை அறிவித்தது.

முன்னதாக, உயர்க்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உயர் கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நடந்த கூட்டத்தில்," வரும் செமஸ்டர் பாடத்திட்டத்தை, 90 வேலை நாட்களுக்குப் பதிலாக  450 மணி நேர வகுப்புகளுக்குள் நடத்தி முடிக்க முடிவு செய்யப் பட்டது. மேலும், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அடுத்த  அடுத்த கல்வி ஆண்டிற்குச் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை இரண்டு/மூன்று வாரங்களுக்குள் வெளியிடவும் முடிவெடுக்கப்பட்டது.

 

 

கல்லூரி நிர்வாகம் தயாரித்த கால அட்டவணையின்படி  ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. 'Google Meet'  செயலி மூலம் காலை 9 முதல் மதியம் 1 மணி வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வருகைப் பதிவு கணக்கில் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை கல்லூரி நிர்வாகங்கள் செய்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்ப்பட்டது.

நேற்றும், இன்றும் மாணவர்களின் வருகை மிகவும் குறைந்த அளவில் இருந்ததாகவும், கூடிய நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்கள் மத்தியில் பிரபலமடையும் என்று கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிகின்றன.

ஆன்லைன் வகுப்பு வழிகாட்டுதல்கள்: மனதில் கொள்ள வேன்டிய முக்கிய 5 அம்சங்கள்

அரசு கல்லூரி ஆசிரியர்கள் கழகம்,"டிஜிட்டல் சாதனங்களுக்கான அணுகலைக் கொண்ட கற்றவர்கள் மற்றும் குறைந்த அல்லது அணுகல் இல்லாத கற்பவர்கள் என இருதரப்பினருக்கும் தேவையான அம்சங்களுடன் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற வேண்டும்"  என்று தமிழக முதல்வர் மற்றும் உயர்க்கல்வி அமைசச்சருக்கு எழுதிய கடிதத்தில் குரிப்பிட்டனர்.

முன்னதாக, 1 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் பள்ளியில் வழங்கப்படும் கல்வி போல, வீட்டிலேயே தரமான கல்வியை வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியது.

வகுப்பு – 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு ஒவ்வொரு வகுப்பும் 30-45 நிமிடங்களுக்கு இரண்டு அமர்வுகளுக்கு மிகாமல் இணையம் மூலம் ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்ளலாம் என்றும்,   வகுப்பு – 9 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு  இணையம் மூலம் ஒத்திசைவுக் கற்றல் தலா 30-45 நிமிடங்களுக்கு நான்கு அமர்வுகளுக்கு மிகாமல் ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்ளலாம் என்றும், ஒன்றாம் வகுப்புக்கு முந்தைய மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நாளில் பெற்றோருடன் உரையாடுவதற்கும், அவர்களுக்கு வழிகாட்டுவதற்கும் 30 நிமிடங்களுக்கு மிகாமல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

கல்வித்தொலைக்காட்சி (யூ டியுப் சேனல்), TNSCERT டியுப் சேனல் , TN Schools Workplace போன்றவைகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை,    தனியார் தொலைக்காட்சிகளின் வாயிலாகவும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

publive-image

வார நாட்களில் 2ம் வகுப்பு முதல்  தனியார் 10ம் வகுப்பு வரை கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி பட்டியல்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

College
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment