தமிழக அரசின் கட்டுப்பாட்டிலான மீன்வளத்துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கு, அறிவியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : ஆய்வக உதவியாளர் ( Laboratory assistant)
பணியிடம் : 01
சம்பளம் : மாதம் ரூ 35,900 முதல் ரூ.1.13,500
வயது வரம்பு : 2019 ஜூலை 1ம் தேதியின்படி, 30 வயதிற்குள் இருக்கவேண்டும்.
கல்வித்தகுதி : அறிவியல் பிரிவுகளான தாவரவியல், விலங்கியல் மற்றும் வேதியியில் பிரிவின் இளங்கலையில் முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி : ஜூன் 22, 2019
எழுத்துத்தேர்வு மையங்கள் : சென்னை, மதுரை மற்றும் கோவை
விண்ணப்ப கட்டணம் : ரூ.150. இதனை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : மே 20, 2019.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விபரங்களுக்கு www.tnpsc.gov.in இணையதளத்தை காணவும்.