Advertisment

Tamil Nadu HSC, SSLC Datesheet 2019: பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களே இது உங்களுக்கான நேரம்!

Tamil Nadu Released Class 10th, 12th Datesheet : பாடங்களுக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
@dge.tn.gov.in

@dge.tn.gov.in

HSC, SSLC Datesheet 2019 : 10 ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் நேரம் குறித்த அனைத்து விவரங்களும் @dge.tn.gov.in இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழக பள்ளிக்கல்வியில் 10 12-ம் வகுப்புகளின் பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. சில மாற்றங்களுடன் பொதுத் தேர்வு கால அட்டவணையை நாள் மற்றும் நேரம் வாரியாக தேர்வுத் துறை @dge.tn.gov.in இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுத தயாராகிக் கொண்டிருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த தளத்தில் சென்று தேர்வு குறித்த பல விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.

Tamil Nadu Class 10th, 12th Datesheet Released at dge.tn.gov.in: தேர்வு அட்டவணை!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 19 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. அதே போல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி மார்ச் 29 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன.

அதன்படி,வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், உயிரியல், வரலாறு, இயற்பியல், வணிகக்கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 10 முதல் 1.15 மணி வரை நடைபெற்ற தேர்வு, தற்போது 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 மணிக்கு தேர்வு அறைக்குள் செல்லும் மாணவர்களுக்கு 10 நிமிடம் கேள்வி தாளை வாசிப்பதற்கான  நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நிமிடம் வினாத்தாளின் பெயர் மற்றும் இதர விவரங்களை எழுதுவதற்கான நேரம் வழங்கப்படும். இவை அனைத்தும் முடிந்தவுடன் மாணவர்கள் சரியாக  காலை 10.15 மணிக்கு தேர்வு எழுத தொடங்கலாம்.

12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை:

மார்ச் 1   - மொழி பாடம்

மார்ச் 5 – ஆங்கிலம்

மார்ச் 7– கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு, வேளாண் பயிற்சி, நர்சிங்(பொது), நர்சிங்(தொழிற்கல்வி)

மார்ச் 11 -இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிகல் மெஷினஸ் மற்றும் உபகரணங்கள், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.

மார்ச் 13  – வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

மார்ச் 15 – கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.

மார்ச் 19 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கோட்பாடு.

10 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை:

publive-image

State Board
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment