Advertisment

தமிழ்நாடு TANCET MBA/MCA படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆரம்பம்; கடைசி தேதி ஆகஸ்ட் 31

Tamil Nadu TANCET MBA/MCA admission schedule released, last date to register is August 31: எம்.பி.ஏ/எம்.சி.ஏ படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆரம்பம்; தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
தமிழ்நாடு TANCET MBA/MCA படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆரம்பம்; கடைசி தேதி ஆகஸ்ட் 31

அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் மண்டல மையங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் MBA/MCA பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை அட்டவணையை சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் tn-mbamca.com என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

Advertisment

இந்த படிப்புகளுக்கு, ஆகஸ்ட் 11 முதல் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை தொடங்கியுள்ளது மற்றும் ஆன்லைனில் பதிவு செய்ய ஆகஸ்ட் 31 கடைசி தேதியாகும். விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 9 வரை தங்கள் அசல் சான்றிதழ்களை சரிபார்க்கலாம்.

அட்டவணைப்படி, MBA மற்றும் MCA படிப்புகளுக்கான முதல் தரவரிசை பட்டியல் செப்டம்பர் 13 அன்று வெளியிடப்படும். மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு இடஒதுக்கீடு பிரிவுகளுக்கான கவுன்சிலிங் செப்டம்பர் 16 அன்று நடத்தப்படும்.

எம்சிஏ படிப்புகளுக்கான சேர்க்கைக்கு, கட்டணத்தை செப்டம்பர் 17 முதல் 18 வரை, மாலை 5 மணி வரை செலுத்தலாம். தற்காலிக ஒதுக்கீட்டின் வெளியீடு செப்டம்பர் 19 அன்று வெளியிடப்படும். செப்டம்பர் 20 ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீட்டின் உறுதிப்படுத்தலைப் பெறலாம் மற்றும் செப்டம்பர் 21 ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்படும்.

எம்பிஏ படிப்புகளுக்கான சேர்க்கைக்கு, கட்டணத்தை செப்டம்பர் 22 முதல் 24 வரை , மாலை 5 மணி வரை செலுத்தலாம். தற்காலிக ஒதுக்கீட்டின் வெளியீடு செப்டம்பர் 25 அன்று வெளியிடப்படும். தற்காலிக ஒதுக்கீட்டை செப்டம்பர் 26 அன்று பெறலாம் மற்றும் தற்காலிக ஒதுக்கீட்டு பட்டியல் செப்டம்பர் 27 அன்று வெளியிடப்படும்.

முதல் கவுன்சிலிங் அமர்வுக்குப் பிறகு இடங்கள் காலியாக இருந்தால், செப்டம்பர் 28 ம் தேதி எம்சிஏ படிப்புக்கும் செப்டம்பர் 29 ம் தேதி எம்பிஏ படிப்புக்கும் துணை கவுன்சிலிங் நடத்தப்படும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment