Advertisment

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் - 185 பணியிடங்களுக்கான முக்கிய விவரங்கள்

Tamilnadu Civil Supplies Corporation recuritment Notification: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பருவகால பணியிடம் பணியாற்றிட தகுதியான ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

author-image
WebDesk
New Update
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் - 185 பணியிடங்களுக்கான முக்கிய விவரங்கள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பருவகால பணியிடம் பணியாற்றிட தகுதியான ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Advertisment

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், " தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ( நெல் கொள்முதல் பருவத்தில் மட்டும்) பட்டியல் எழுத்தர் 62, உதவியாளர் 72 மற்றும் காவலர் 51 பணியாற்றிட பணியிடத்திற்கு பணியாளர்கள் ( ஆண்கள் மட்டும்) நியமனம் செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இடஒதுக்கீடு முறையில் 2020ம் ஆண்டு 31.12.2020  அன்று பொதுப்பிரிவினர் 18 வயது முதல் 30 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிறபடுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ( முஸ்லிம் )  18 வயது முதல் 32 வயது வரையிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ( அருந்ததியினர்) 18 வயது முதல் 35 வயது வரை விண்ணபிக்கலாம்.

கல்வித் தகுதி:  எழுத்தருக்கு B.sc (Biology) மற்றும்  B.sc Non Biology , உதவியாளருக்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் காவலர் பணிக்கு எட்டாம் வகுப்புத் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விபரம்:

பட்டியல் எழுத்தர் – Basic ரூ. 2410 , DA- ரூ. 4049

உதவியாளர் காவலர் – ரூ.2359 -  DA-ரூ. 4049                  காவலர் – Basic  ரூ.2359 -  DA- ரூ. 4049

 

NEET 2021: கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பாடப்பிரிவுகள் எவை?

தகுதியுடையவர்கள் உரிய சான்றிதழ்களுடன் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சச்சிதானந்த மூப்பனார் சாலை, தஞ்சாவூர் - 613001 என்ற முகவரியுள்ள அலுவலகத்தில், சான்றோப்பமிடப்பட்ட கல்வித்தகுதி சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியற்றுடன் 28-01-2021- க்குள் நேரிலோ அல்லது பதிவுத்தபால் மூலமாகவோ கேட்டுக் கொள்ளப்படுகிறது. வரப்பெற்ற வின்னபங்களில் அரசு/ கழக விதிகளின் படி தகுதியுடைய நபர்களுக்கு நேர்காணல் கடிதம் அனுப்பப்படும்," என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Job
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment