தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையத்தில் வேலை; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Tamilnadu Commissionerate for the Welfare of Differently Abled recruitment: தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையத்தில் வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 15.11.2021 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தொழில்நுட்ப உதவியாளர் (Skilled Assistant)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 7

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் DTE முடித்திருக்க வேண்டும். காலனிகள் தயாரிப்பு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் ST / SCA/ SC பிரிவினர் 37  வயது வரையிலும், MBC/ BCM /BC பிரிவினர் 34 வயது வரையிலும், விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் 10 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை உண்டு.

சம்பளம் : ரூ.19,500 – 71,900

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.scd.tn.gov.in/press_release/Skilled%20Assistant%20Grade%20II%20notification.pdf என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  

முகவரி

State Commissioner, Commissionerate for the Welfare of Differently Abled, Lady Willington College Campus, No.5, Kamarajar Salai, Chennai-5

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.11.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.scd.tn.gov.in/press_release/Skilled%20Assistant%20Grade%20II%20notification.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu commissionerate for the welfare of differently abled recruitment

Next Story
வேலை தேடுபவர்களுக்கு பொன்னான வாய்ப்பு : தமிழக அரசின் வழக்கறிஞர் பணிTNPSC VAO Recruitment 2019
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com