பாராட்டை பெறும் பள்ளிக்கல்வித் துறையின் சமீபத்திய அறிவிப்புகள்

இருக்கும் அரசு  துறைகளில், பள்ளிக்கல்வி துறை சிறப்பாக செயல்படுகிறது என்று அவ்வப்போது எதிர்கட்சிகளும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்

தமிழக பள்ளிக்கல்வித் துறை சில ஆண்டுகளாகவே நல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருக்கும் அரசு  துறைகளில், பள்ளிக் கல்வி துறை சிறப்பாக செயல்படுகிறது என்று அவ்வப்போது எதிர்கட்சிகளும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையின் சமீபத்திய இரண்டு முயற்சிககள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன .

மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்:  

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்- காலை, மாலை சிறு இடைவேளை, மதியம் உணவு நேரம் போன்ற நேரங்களில் மாணவர்கள் போதுமான தண்ணீர் அருந்த அறிவுரை வழங்குமாறு, அனைத்து அரசு/அரசு உதவி பெரும் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை பள்ளித்  தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

 

இந்த நடவடிக்கையின் மூலம், ஒவ்வொரு மாணவர்களுக்கும், தண்ணீர் அருந்துவதன் முக்கியத்துவம் உணர்த்த  முடியும் என்று பள்ளிக்கல்வி துறை நம்புகிறது.

முன்னதாக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் குழைந்தைகள் தின விழா பேருரையில் மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அதன், தொடர்ச்சியாக பள்ளிக்கல்வித் துறை இந்த முயற்சியை எடுத்துள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மற்றும் உதவி வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளி ஆய்வின் போது மாணவர்கள் தண்ணீர் அருந்தும் பழக்கத்தினை ஏற்படுத்திக்  கொண்டார்களா என பார்வையிடவும் கேட்டுக் கொள்ளபப்டுகிராகள்.

ஆங்கிலம் பேசும் திறனை அதிகப்படுத்துதல் :   

அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து வாரத்தில் ஒரு வகுப்பை மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறனை  மேம்படுத்துவதற்கும் ஒத்துக்குகிறது பள்ளிக்கல்வித் துறை.  ஆறாம் முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் 45 மணி நேரமும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு 90 நிமிடங்களும் ஒத்துக்கப்படுகிறது.

இதனால், அன்றாட வாழ்வில் ஆங்கில மொழியை பயன்படுத்தும் வகையில் மாணவர்களை தயார் செய்ய முடியும் என்று பள்ளிக்கல்வித் துறை நம்புகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close