Advertisment

பொறியியல் கவுன்சிலிங்; கல்லூரிகளை தேர்வு செய்யும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்

Tamilnadu Engineering Counselling college selection details: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை; சிறந்த கல்லூரிகளுக்கு அதிக போட்டி இருப்பதால், இடங்களை உறுதி செய்ய அதிக கல்லூரிகளை தேர்வு செய்ய நிபுணர்கள் வலியுறுத்தல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNEA 2021 rank list, TNEA Counselling

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு முதல் சுற்று கவுன்சிலிங்கில் 5000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு போட்டியிடுவதால், மாணவர்கள் சீட் ஒதுக்கீட்டின் சிறந்த வாய்ப்புகளுக்கு அதிக கல்லூரிகளைப் பட்டியலிடுவது புத்திசாலித்தனமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisment

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் 1.4 லட்சம் இடங்களை நிரப்புவதற்கான பொதுப்பிரிவு ஆன்லைன் கவுன்சிலிங் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 17 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு நான்கு சுற்று கவுன்சிலிங்கில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

200 முதல் 186 வரை கட்ஆஃப் மதிப்பெண் கொண்ட 14,788 மாணவர்கள் முதல் சுற்று கவுன்சிலிங்கிற்கு அழைப்படுவார்கள். அதேநேரம் கடந்த ஆண்டில் முதல் சுற்றில் சுமார் 9,000 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதனால் முதல் சுற்றில் சிறந்த கல்லூரிகளில் இடங்களைத் தேர்வு செய்ய மாணவர்களிடையே போட்டி கடுமையாக இருக்கும் எனத் தெரிகிறது. எனவே அதிக கல்லூரிகளை தேர்வு பட்டியலில் சேர்ப்பது நல்லது. இதனிடையே முதல் சுற்றுக்கான கல்லூரி தேர்வுகளை மாணவர்கள் அக்டோபர் 1 மற்றும் 2 தேதிகளில் மாற்றிக் கொள்ளலாம் அல்லது புதுப்பித்துக் (அப்டேட்) கொள்ளலாம்.

மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்ப தாங்கள் விரும்பும் கல்லூரிகளின் பட்டியலைக் கால அட்டவணைக்கு முன்னதாகவே தயாரித்துக் கொள்ளவும், ஒரே பெயர்களைக் கொண்ட கல்லூரிகளுக்கு இடையே குழப்பத்தைத் தவிர்க்க கல்லூரி குறியீடுகளை உள்ளிடவும், இடைத்தரகர்களைத் தவிர்ப்பதற்காக ப்ரௌசிங் செண்டர்களில் கல்லூரிகளை தேர்வு செய்வதை தவிர்க்கவும் வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும்போது மாணவர்கள் கடந்த ஆண்டின் தரவரிசைகளை வழிகாட்டியாகப் பயன்படுத்தலாம். கட்-ஆஃப் மதிப்பெண்கள் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய மாறுபாடுகளைக் கொண்டிருக்கும். இந்த ஆண்டு நிறைய மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் முதல் சுற்றில் போட்டி கடுமையாக இருக்கும், எனவே முதல் சுற்றுக்கு மாணவர்கள் அதிக கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக, 186 முதல் 192 வரையில் கட்-ஆஃப் உள்ள மாணவர்கள் பொறியியல் இடங்களைப் பெற குறைந்தபட்சம் 200 தேர்வுகளைக் கொடுக்க வேண்டும், என வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், மாணவர்கள் மற்றவர்களின் அழுத்தத்திற்குப் ஆளாகாமல் திறமை மற்றும் அடிப்படை விருப்பத்தின் அடிப்படையில் ஒரு பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கூடுதலாக, மாணவர்கள் சாத்தியமான வேலை வாய்ப்புகள், கட்டண தொகுப்புகள் மற்றும் படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் மேலும் படிக்க உள்ள வாய்ப்புகளை கருத்தில் கொள்ள வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகள், கற்பித்தலின் தரம், NAAC மற்றும் NBA அங்கீகாரம் நிலை மற்றும் வேலைவாய்ப்புகளின் அடிப்படையில் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Engineering Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment