Tamilnadu Fisheries Department recruitment 2022 for 433 sagar mitra jobs: தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் 433 சாகர் மித்ரா பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.08.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
சாகர் மித்ரா
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 433
கல்வித் தகுதி : இளங்கலை மீன்வள அறிவியல்/கடல் உயிரியியல்/விலங்கியல்/தகவல் தொழில்நுட்பம் (Bachelor degree in Fisheries Science/Marine Biology/Zoology/ Chemistry/ Botany/ Biochemistry/ Microbiology/ Physics/Information Technology (IT))
இதையும் படியுங்கள்: TNPSC Jobs; தமிழக அரசில் 1231 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
வயதுத் தகுதி : 01.07.2022 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ.15,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Sagar_Mitra_Notification.pdf என்ற இணையதளத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்ப படிவத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட கடற்கரையோர மாவட்டங்களின் இணை இயக்குனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.08.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Sagar_Mitra_Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.