Advertisment

அனைத்து பல்கலைகழகங்களிலும் எம்ஃபில் படிப்பு தொடரும் : அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

Tamilnadu Higher Education : மாநில பல்கலைகழகங்களில் எம்ஃபில் படிப்பை தொடரலாம் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
அனைத்து பல்கலைகழகங்களிலும் எம்ஃபில் படிப்பு தொடரும் : அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

Tamilnadu All Universities To Continue M.Phil Course : மெட்ராஸ் பல்கலைகழகம் எம்ஃபில் படிப்பை நிறுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அனைத்து மாநில பல்கலைக்கழகங்களும் 2021-22 ஆம் ஆண்டுகளில் எம் பில் பட்டப்படிப்பை தொடரலாம் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

"மெட்ராஸ் பல்கலைக்கழகம் சமீபத்தில் எம்ஃபில் டிகிரியை நிறுத்தியது. இதனால் பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், இன்று சென்னையில், மாநில பல்கலைகழகங்களி துணைவேந்தர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்ச கே.பொன்முடி, எம்ஃபில் பட்டபடிப்பின் தேவை குறித்து இரண்டு கருத்துக்கள் இருந்தாலும், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம் பில் படிப்பைத் தொடர நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் மாணவர்கள் சேர்க்கை சரியாக இல்லாததால் மெட்ராஸ் பல்கலைக்கழகம் எம்ஃபில் பட்டத்தை நிறுத்தியது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் (யுஜிசி) பிஹெச்.டி, நெட் மற்றும் எஸ்.எல்.இ.டி ஆகியவற்றை கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் ஆசிரிய உறுப்பினர்களுக்கு குறைந்தபட்ச தகுதியாக மாற்றிய பின்னர் ஆராய்ச்சி  மற்றும் முனைவர் பட்டம் அதன் தனித்தனைமையை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனாலும் கல்வியாளர்களில் ஒரு பகுதியினர் எம்ஃபில் படிப்பை ஒழிப்பது தேசிய கல்வி கொள்கை 2020 இன் ஒரு பகுதி என்றும் மாநில அரசு இதை ஏற்காத நிலையில் பல்கலைக்கழகம் என்.இ.பி. ஐ செயல்படுத்துகிறது என்றும் கூறியுள்ளனர். ஆனால் முன்னர் அறிவித்தபடி, அனைத்து மாநில பல்கலைக்கழகங்களும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் யுஜி சேர்க்கைகளைத் தொடங்கும் என்று அமைச்சர் கூறினார்.

மேலும் தேர்வு முடிவுகளை அறிவித்த பின்புதான் மாணவர்கள் சேர்க்கை தொடங்க வேண்டும் என்று மாநில பல்கலைக்கழகங்களுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்," ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வை  இந்த ஆண்டு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் (DOTE) நடத்தும் என்றும், அனைத்து மாநில பல்கலைக்கழகங்களும் பேராசிரியர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஒழுங்குபடுத்துபவர்களை நியமிப்பதற்கான சீரான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் புதிதாக ஒரு நபரை சேர்க்கும் பணியில் வெளிப்படைத்தன்மையை வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education News University Of Madras
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment