வரலாற்றில் முதல்முறையாக… காலியான 400 இடங்களுக்கு மீண்டும் கவுன்சலிங்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

Tamilnadu Education News : கல்லூரியில் காலியாக உள்ள இடங்களை ஒருங்கிணைக்க நியாயமான கால அவகாசம் அளித்த பிறகே இந்த இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தலாம்”

Anna University News Update : தமிழகத்தின் முன்னணி பல்கலைகழகமான அண்ணா பல்கலைகழகத்தில் மருத்துவ படிப்புக்கு தேர்வாக மாணவர்களின் காலியாக உள்ள 400 இடங்களுக்கு மீண்டும் கவுன்சிலிங் வைத்து மாணவர்களை தேர்வு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் “கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை ஒருங்கிணைக்க நியாயமான கால அவகாசம் அளித்த பிறகே இந்த இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தலாம்” என்று உயர்கல்வித்துறை செயலர் கார்த்திகேயன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இதில் இந்த காலியிடங்களை நிரப்ப ஏற்கனவே பதிவு செய்து சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தவும், தேவை ஏற்பட்டால் அடுத்தடுத்த கட்ட கவுன்சிலிங் நடத்தவும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரை கேட்டுக் கொண்டது.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை குழு இந்த இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கை குறைந்தது இரண்டு சுற்றுகளை நடத்த வாய்ப்புள்ளதாக பல்கலைகழக வட்டாரங்கள் தெரிவித்தன, முதலில் தற்போதுள்ள பணியிடங்களை நிரப்பவும், இரண்டாவது சுற்று புதிய காலியிடங்களை நிரப்பவும் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஏஐசிடிஇ (AICTE) இன் திருத்தப்பட்ட கல்விக் ஆண்டின்படி, புதிய மாணவர்களை சேர்க்க நவம்பர் 30 கடைசித் தேதியாகும்.

“ஏற்கனவே பதிவு செய்தவர்கள் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்பார்கள் என்பதால். இந்த கவுன்சிலிங்கிற்கு கடைசி தேதி பொருந்தாது” என்று உயர்கல்வித் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2021-ன்படி கவுன்சிலிங்கில் ஒதுக்கீடு பெற்ற 95,000 மாணவர்களில் சுமார் 10,000 பேர் கல்லூரிகளில் சேரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த காலியிடங்களை நிரப்ப அதிக அளவிலான விண்ணப்பதாரர்கள் வருவார்கள் என்பதால் இது ஒரு நல்ல நடவடிக்கை என்று உயர்நிலை கல்லூரிகள் தெரிவித்துள்ளன.

“வழக்கமான நடைமுறையின்படி, சுயநிதி கல்லூரிகள் தங்கள் விண்ணப்பதாரர்களிடமிருந்து காலியாக உள்ள இடங்களை நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால்  இன்டர்னல் கவுன்சிலிங்கால் அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நிலையில் உள்ள கல்லூரிகளில் அதிக இடங்கள் காலியாகிவிடும் என்று பொறியியல் கல்லூரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் “இரண்டாம் கட்ட கவுன்சிலிங் புதிய மாணவர்களையும் விண்ணப்பிக்க அனுமதித்தால், அது சேர்க்கையை அதிகரிக்கும். ஆனால் இந்த நடவடிக்கை உயர்நிலைக் கல்லூரிகளையும் பாதிக்கும், ஏனெனில் மாணவர்கள் தனியார் கல்லூரிகளை விட அரசு நிறுவனங்களை விரும்புவார்கள்.

இதனால் அடுக்கு -2 மற்றும் அடுக்கு -3 கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் இருக்கலாம். மாணவர்கள் அடுக்கு 1 கல்லூரிகளுக்குச் செல்ல விரும்புகிறார்கள், ”என்று தமிழ்நாட்டின் சுயநிதி தொழில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு செயலாளர் பி.செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu higher education department allowed for re counselling for anna university

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express