தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் மேலாளர் உட்பட 5 விதமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் மேலாளர், முதுநிலை மேலாளர் உள்ளிட்ட 50 பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 14.09.2021.
மேலாளர் - நிதி Manager (Finance)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 4
வயதுத் தகுதி : 01.07.2021 அன்று 21 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : CA/ICWA/ அல்லது முதுகலை படிப்புடன் MBA படித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ.56,900 – 1,80,500
மேலாளர் - சட்டம் Manager (Legal)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 2
வயதுத் தகுதி : 01.07.2021 அன்று 21 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : இளங்கலை சட்டம் படித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அல்லது 7 வருட பார் கவுன்சில் அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ.56,900 – 1,80,500
முதுநிலை அலுவலர் – தொழில்நுட்பம் Senior Officer (Technical)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 8
வயதுத் தகுதி : 01.07.2021 அன்று 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : B.E., / B.Tech., / AMIE படிப்புகளில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ.56,100 – 1,77,500
முதுநிலை அலுவலர் – நிதி Senior Officer (Finance)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 27
வயதுத் தகுதி : 01.07.2021 அன்று 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : CA/ICWA/ அல்லது முதுகலை படிப்புடன் MBA படித்திருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ.56,100 – 1,77,500
முதுநிலை அலுவலர் – சட்டம் Senior Officer (Legal)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 9
வயதுத் தகுதி : 01.07.2021 அன்று 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : இளங்கலை சட்டம் படித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளில் பணி அனுபவம் அல்லது 3 வருட பார் கவுன்சில் அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ.56,100 – 1,77,500
வயது வரம்பு தளர்வு : SC/SCA/ST/MBV(V)/MBC&DNC/MBC/BC/BCM மற்றும் மாற்று திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு 100 நிமிடங்கள் நடைபெறும். இதில் கொள்குறி வகையில் 100 வினாக்கள் கேட்கப்படும். நேர்முகத் தேர்வு 10 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம் : MBV(V)/MBC&DNC/MBC/BC/BCM மற்றும் பொது பிரிவுகளுக்கு ரூ. 1000
SC, SCA, ST பிரிவுகளுக்கு ரூ.500
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/tiiclmsfeb21 என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.09.2021
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tiic.org/wp-content/uploads/2021/08/TIIC_Website-Notification.pdf என்ற இணைய தளப்பக்கத்தை பார்வையிடவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.