அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு தங்கும் வசதியுடன் 35 நாள் நீட் பயிற்சி: செங்கோட்டையன்

ஜூன் மாத நடுப்பகுதியில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு மாநில அரசின் குடியிருப்பு பயிற்சித் திட்டம் தொடங்கும்.

Tamil Nadu news today live updates

ஜூன் மாத நடுப்பகுதியில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு மாநில அரசின் சிறப்பு பயிற்சித் திட்டம் தொடங்கும் என்று தமிழக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  தெரிவித்தார்.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும்  ஜுலை 26 அன்று  நடைபெறும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் முன்பு அறிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர்/ அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட வேண்டிய இந்த நீட் தேர்வு  சிறப்பு இலவச பயற்சி வகுப்புகள் உள்ளாட்சித் தேர்தல்,நீட் தேர்வில் இருந்து  விளக்கு அளிக்கும் மசோதா, உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு ரத்து செய்யும் வழக்கு, தொடர்ச்சியான கொரோனா பொதுமுடக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் தொடங்கப்படமால்  இருந்தன.

தற்போது திம்மடிடப்பட்டிருக்கும் குடியிருப்பு பயிற்சித் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள ஒன்பது கல்லூரிகளில், 35 நாட்கள் தங்க வைக்கப்பட்டு 7,300 மாணவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த குறிப்பிட்ட மாணவர்கள் தங்கள் முந்தைய வகுப்புகளில் வெளிபடுத்திய செயல்திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதுகுறித்த மேலும் விவரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

நீட் தேர்வு டிப்ஸ்:  

நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு இருக்கும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கான விரிவுரைகளை தேசிய திறனறி தேர்வு ஏஜென்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான : https://nta.ac.in/LecturesContent என்பதில் பார்க்கலாம்.

ஸ்வயம்பிரபா டி.டி.எச் சேனல், ஸ்வம்பிரபாவின் ஐ.ஐ.டி பால், திக்‌ஷா, இ-பாடசாலை, தேசிய டிஜிட்டல் நூலகம், ஸ்வயம், இ-பிஜி பாடசாலை, ஷோத்கங்கா, இ-ஷோத்சிந்து, இ-யந்ரா, மொழி கற்றுக்கொள்வதற்கான தனிப்பயிற்சி மற்றும் மெய்நிகர் ஆய்வுக்கூடங்கள் ஆகியன மேலே குறிப்பிட்ட இயங்கு தளங்களில் நுழைவுத்தேர்வுக்கான தயாரிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu neet residential training programme starts from mid june

Next Story
மாணவர்களுக்கு அடித்தது லக் : ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் – UGC ஒப்புதல்தமிழ் நியூஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com