scorecardresearch

3000 காலிப் பணியிடங்கள்… 70-க்கு மேற்ப்பட்ட நிறுவனங்கள்: தென்காசியில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்

வரும் பிப்ரவரி 04-ந் தேதி தென்காசி மாவட்டத்தில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

3000 காலிப் பணியிடங்கள்… 70-க்கு மேற்ப்பட்ட நிறுவனங்கள்: தென்காசியில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்

70-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப்ரவரி 4-ந் தேதி தென்காசி மாவட்டத்தில் நடைபெற உளள்ளது.

தமிழகத்தில் படித்த இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களில், மாவட்ட நிர்வாகம், தன்னார்வ நிறுவனங்கள் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

அந்த வகையில், வரும் பிப்ரவரி 04-ந் தேதி தென்காசி மாவட்டத்தில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 70-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். தென்காசி மாவட்டத்தின் கொடிக்குறிச்சி ஸ்ரீ நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஊரக மற்றும் நகர்புற இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu tenkasi disterict jobs fair on february 2023 in tamil