Advertisment

TNTET Exam: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ரெடியா? சிலபஸ், தேர்வு முறை இதுதான்!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு; தகுதிகள், பாடத்திட்டம், தேர்வு முறை குறித்த முக்கிய தகவல்கள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தேர்வு முறை எப்படி?

Tamilnadu TET exam qualification, syllabus and exam pattern in Tamil: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்த தேர்வுக்கான தகுதிகள், பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை குறித்த முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதித் தேர்வு. இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் ஆக விருப்பம் உள்ளவர்கள், கட்டாயம் இந்த தேர்வு எழுதி, தகுதி மதிப்பெண்ணைப் பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட் படிப்புகளை படித்துவிட்டு, ஆயிரக்கணக்கானோர், இந்த தகுதித் தேர்வை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்தநிலையில், தேர்வு வாரியம் தற்போது தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கும், இரண்டாம் தாள் பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கும் நடைபெறும்.

கல்வித் தகுதி

முதல் தாள் எழுதுவதற்கு, 12 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) முடித்திருக்க வேண்டும்.

இரண்டாம் தாள் எழுதுவதற்கு ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) அல்லது ஆசிரியர் பயிற்சியில் (B.Ed) இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இரண்டாம் தாள் எழுத தகுதியுள்ளவர்கள் முதல் தாளையும் எழுதலாம்.

வயதுத் தகுதி: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் எழுதலாம். உச்ச வயது வரம்பு கிடையாது.

தேர்வு முறை

முதல் தாள் : 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 150 வினாக்கள் கேட்கப்படும். இதில்

குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் (Child Development and Pedagogy) – 30

மொழிப்பாடம் – 30 (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்துக் கொள்ளலாம்).

ஆங்கிலம் – 30

கணிதம் – 30

சுற்றுச்சூழல் கல்வி – 30

இந்த தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம்.

பாடத்திட்டம்

குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்: 6 - 11 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்.

மொழிப்பாடம்: சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

ஆங்கிலம்:  மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள்: கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல்.

இரண்டாம் தாள் : 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 150 வினாக்கள் கேட்கப்படும். இதில்

குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் (Child Development and Pedagogy) – 30

மொழிப்பாடம் – 30 (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்துக் கொள்ளலாம்).

ஆங்கிலம் – 30

சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு - 60

இந்த தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம்.

பாடத்திட்டம்

குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்: 11 - 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்.

மொழிப்பாடம்: சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

ஆங்கிலம்:  மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு: கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல்.

இதையும் படியுங்கள்: தமிழ்நாடு மருத்துவத்துறையில் 238 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பிக்கும் முறை: இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ. 500, SC, SCA, ST மற்றும் மாற்று திறனாளிகளுக்கு ரூ.250

விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.04.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs Tet Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment