தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் வேலை; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Tamilnadu TUFIDCO Powerfin invites application for various posts: தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனில் உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 20.12.2021க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

உதவி மேலாளர் (Assistant Manager)

காலியிடங்களின் எண்ணிக்கை : 01

கல்வித்தகுதி : CA/CWA படித்திருக்க வேண்டும். மற்றும் 5 வருட அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ.56,100 – 1,77,500

தனி உதவியாளர் (Personal Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 01

கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.36,200 – 1,14,800

இளநிலை மேலாளர் (Junior Manager)

காலியிடங்களின் எண்ணிக்கை : 01

கல்வித்தகுதி : CA/CWA படித்திருக்க வேண்டும். மற்றும் 3 வருட அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ.35,400 – 1,12,400

இளநிலை உதவியாளர் (Junior Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 02

கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.19,500 – 62,000

வயதுத் தகுதி : 30 வயதிற்குட்பட்டவர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும் BC/MBC/OBC பிரிவினர் 32 வயது வரையிலும், SC/ST பிரிவினர் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tnpowerfinance.com/tnpfc-web/home என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட அஞ்சல் முகவரி அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : Chief Financial Officer, 490/3-4, “TUFIDCO POWERFIN” Tower, Anna Salai, Nandanam, Chennai – 600035.

மின்னஞ்சல் முகவரி : cfo@tnpowerfinance.comவிண்ணப்பிக்க கடைசி தேதி : 20.12.2021

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu tufidco powerfin invites application for various posts

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com