Advertisment

TNEB Recruitment : 2400 காலி பணியிடங்கள், TANGEDCO அறிவிப்பு வெளியானது

TNEB Job Notification 2020 :மொத்தம் 2400 பணிகளுக்கான செய்தி அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tangedco recruitment 2020,www.tangedco.gov.in recruitment tneb recruitment, Direct Recruitment

tangedco recruitment 2020,www.tangedco.gov.in recruitment tneb recruitment, Direct Recruitment

TANGEDCO Recruitment 2020:  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ( TANGEDCO) இளநிலை கணக்கு உதவியாளர், கணக்கீட்டாளர், உதவி பொறியாளர் ஆகிய பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisment

1. பனியின் பெயர் : இளநிலை கணக்கு உதவியாளர் 

காலி பணியிடங்கள்:  500

ஊதிய நிலை: ரூ. 19500 - 62000(நிலை-3)

முக்கிய தேதிகள்:  

வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி தொடங்கி, மார்ச் 9ம் தேதி முதல் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிக்கு கணினி அடிப்படையிலான தேர்வு  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி, நேரம் tangedco.gov.in என்ற இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: இளங்கலை வணிகவியல்(B.Com) படிப்பில் பட்டம் பெற்ற  மாணவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள்,10-12ம் வகுப்பு/டிப்ளமோ தேர்ச்சி பெற்று இந்த பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் .

விண்ணப்பக் கட்டணம்: முற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லிம்) வகுப்பினருக்கு ரூ.1000 விண்ணப்பக் கட்டணம்.

ஆதிதிராவிடர்,ஆதிதிராவிடர்(அருந்ததியர்கள்), பழங்குடி வகுப்பினர், மற்றும்  அனைத்து பிரிவினை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் ரூ. 500 விண்ணப்பக் கட்டணம்.

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் : இந்த 5 Current Affairs-யும் படிச்சாச்சா?

 

2. பணியின் பெயர் : கணக்கீட்டாளர் 

காலி பணியிடங்கள்:  1300

ஊதிய நிலை: ரூ. 19500 - 62000(நிலை-3)

முக்கிய தேதிகள்ஜனவரி (நாளை) 10ம்  தேதி முதல் தொடங்கி, பிப்ரவரி 10ம் தேதி முதல் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிக்கு கணினி அடிப்படையிலான தேர்வு  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி, நேரம் tangedco.gov.in என்ற இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கலை, அறிவியல், வணிகவியல் ஆகிய பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். தேர்வர்கள்,10-12ம் வகுப்பு/டிப்ளமோ தேர்ச்சி பெற்று இந்த பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் .

விண்ணப்பக் கட்டணம்:  முற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லிம்) வகுப்பினருக்கு ரூ.1000 விண்ணப்பக் கட்டணம்.

ஆதிதிராவிடர்,ஆதிதிராவிடர்(அருந்ததியர்கள்), பழங்குடி வகுப்பினர், மற்றும்  அனைத்து பிரிவினை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் ரூ. 500 விண்ணப்பக் கட்டணம்.

3. பணியின் பெயர் : உதவி பொறியாளர்

ஊதிய நிலை: ரூ. 39800 - 126500(அதிகாரிகள்)

காலி பணியிடங்கள் : 600 உதவி பொறியாளர் (மின்னியல் - 400, இயந்திரவியல் - 125, கட்டடவியல் - 75)

முக்கிய தேதிகள்முக்கிய தேதிகள்ஜனவரி 24ம் தேதி முதல் தொடங்கி, பிப்ரவரி 24ம் தேதி முதல் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிக்கு கணினி அடிப்படையிலான தேர்வு  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி, நேரம் tangedco.gov.in என்ற இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:  இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (EEE/ECE/EIE/CSE/IT/Mechanical/Civil (அ) AMIE தேர்வில் எலெக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல்/சிவில் பிரிவில் தேர்ச்சிப் பெற்று இருக்க வேண்டும்)

விண்ணப்பக் கட்டணம்:  முற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லிம்) வகுப்பினருக்கு ரூ.1000 விண்ணப்பக் கட்டணம்.

ஆதிதிராவிடர்,ஆதிதிராவிடர்(அருந்ததியர்கள்), பழங்குடி வகுப்பினர், மற்றும்  அனைத்து பிரிவினை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் ரூ. 500 விண்ணப்பக் கட்டணம்.

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment