Advertisment

TET: ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 விண்ணப்பிப்பது எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 9,494 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆண்டுத் திட்டத்தை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.

author-image
WebDesk
New Update
TET: ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 விண்ணப்பிப்பது எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு

ஆசிரியர் பணியில் சேர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழ்நாட்டில் நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, வரும் மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Advertisment

கட்டணம் விவரம்:

தேர்வில் பங்கேற்ப்போருக்கு உரிய விண்ணப்ப கட்டணம் 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் 250 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

விண்ணப்பிப்பது எப்படி

தேர்வர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. Paper-I and Paper-II ஆகிய தாள்களுக்கு, தனித்தனி விண்ணப்பங்கள் உள்ளன.

தேவையான ஆவணங்கள்

  • சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ(Size: 20 - 60kb )
  • கையொப்பம் போட்டோ (Size: 10-30kb)
  • இமெயில் ஐடி மற்றும் மொபைல் நம்பர் அவசியம்

குறிப்பு: தேர்வு முடிவு வரும் வரை, அந்த மெயில் ஐடி உபயோகத்தில் இருப்பது கட்டாயமாகும்.

முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு http://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf என்ற லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கால அவகாசத்தை 7ஆண்டுகளிலிருந்து வாழ்நாள் முழுவதும் மத்திய அரசு நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tet Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment